உதயநிதி துணை முதல்வராக வேண்டும் ; கிடாய் வெட்டி அசைவ விருந்து வைத்து வழிபாடு செய்த பெண் ஒன்றிய கவுன்சிலர்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டி அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் கிடாய்களை பலியிட்டு கறி விருந்து வைத்து வழிபாடு நடத்தினார்.
உதயநிதி துணை முதல்வராக வேண்டுமென்று திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் கிடாய்களை வெட்டி அசைவ விருந்து வைத்து வழிபாடு.
உதயநிதியின் நிலைப்பாடு?
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அமைச்சர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதியே ஒரு முறை பேசியிருந்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞர் நலன் பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் நம் தளபதியும் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
- GOAT: நாளை மறுநாள் கோட் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ்? நாளை வருகிறது அப்டேட் - குஷியில் ரசிகர்கள்
தமிழக முதல்வர் பதில்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?” - என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என தடாலடியாக பதிலளித்தார். ஆனாலும் தொண்டர்களும், திமுக ஆதரவாளர்களும் விடுவதாக இல்லை. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி துணை முதல்வராக வேண்டுமென்று தி.மு.க., பெண் ஒன்றிய கவுன்சிலர் கிடாய்களை வெட்டி அசைவ விருந்து வைத்து வழிபாடு செய்துள்ளார்.
கிடாய் வெட்டி வழிபாடு
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டி அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் தி.மு.க.பெண் ஒன்றிய கவுன்சிலர் கிடாய்களை பலியிட்டு கறி விருந்து வைத்து வழிபாடு நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி சாத்தையா, இவர் இளையான்குடி தி.மு.க., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது திமுகவில் உள்ள அனைத்து தரப்பினரும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சாலை கிராமம் திமுக பெண் ஒன்றிய கவுன்சிலரான செல்வி சாத்தையா இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் அப்பகுதியில் உள்ள அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் 15க்கும் மேற்பட்ட கிடாய்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, குடல் கறி, தலைக்கறி முட்டை மற்றும் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களுடன் கறி விருந்து வைத்து அசத்தியுள்ளதோடு மட்டுமில்லாமல் சாலைகிராமம் மற்றும் இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் குடும்பத்தோடு கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் வழிபாடும் நடத்தியுள்ளார். இந்த கறிவிருந்தில் இளையான்குடி, சாலைகிராமம், அய்யம்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Butterfly Park: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு ; அனுமதி இலவசமாம் மக்களே
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Independence Day 2024: இந்தியாவிற்காக அதிக முறை, குறைந்த முறை தேசிய கொடி ஏற்றிய பிரதமர்கள் யார்? யார்? ஓர் அலசல்