மேலும் அறிய
Advertisement
Independence Day 2024: இந்தியாவிற்காக அதிக முறை, குறைந்த முறை தேசிய கொடி ஏற்றிய பிரதமர்கள் யார்? யார்? ஓர் அலசல்
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய திருநாட்டிற்காக எந்தெந்த பிரதமர்கள் எத்தனை முறை தேசிய கொடி ஏற்றியுள்ளனர் என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒட்டுமொத்த நாடும் விழாக்கோலத்துடன் களைகட்டி காணப்படுகிறது.
இந்த சூழலில், நாடு சுதந்திரம் பெற்றது முதல் அதிக முறை தேசிய கொடி ஏற்றிய பிரதமர்கள் யார்? யார்? என்ற பட்டியலை முழுமையாக இங்கு காணலாம்.
- சுதந்திர போராட்ட தியாகியும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவே இந்திய திருநாட்டிற்காக அதிக முறை தேசிய கொடி ஏற்றியவர் என்ற பெருமையை பெற்றவர். 1947ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை தொடர்ந்து பிரதமராக பொறுப்பு வகித்த நேரு 17 முறை தொடர்ந்து நாட்டின் தேசிய கொடியை ஏற்றினார்.
- நேருவிற்கு பிறகு அதிக முறை நாட்டின் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றியவர் என்ற பெருமையை பெற்றவர் இந்திரா காந்தி. அவர் 16 முறை தேசிய கொடி ஏற்றியுள்ளார். 1966ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையிலும், பின்னர் 1980ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரையிலும் தேசிய கொடியை சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஏற்றியுள்ளார்.
- இந்தியாவின் தற்போதைய பிரதமர் மோடி தொடர்ந்து 10 முறை தேசிய கொடி ஏற்றியுள்ளார். 2014ம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பு வகித்து வரும் இவர், கடந்தாண்டுடன் சேர்த்து 10 முறை தேசிய கொடியை சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஏற்றியுள்ளார். நடப்பாண்டில் ஏற்றினால் அது 11வது முறையாகும்.
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அவர் தொடர்ந்து 10 முறை தேசிய கொடி ஏற்றியுள்ளார். பிரதமர் மோடி அவரது சாதனையை இந்தாண்டு முறியடிக்க உள்ளார்.
- மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் என தொடர்ந்து 6 முறை சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றியுள்ளார்.
- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரையில் மொத்தம் 5 முறை தேசிய கொடியை சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் ஏற்றியுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நரசிம்ம ராவ் 5 முறை தேசிய கொடி ஏற்றியுள்ளார். இவரது 1991 முதல் 96 வரையிலான ஆட்சியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
- சுதந்திர போராட்ட தியாகியும், இந்தியாவை வலுவாக கட்டமைக்க முக்கிய காரணமாக திகழ்ந்த லால் பகதூர் சாஸ்திரி இரண்டு முறை தேசிய கொடி ஏற்றியுள்ளார். அவர் 1964ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்தார்.
- சுதந்திர போராட்ட தியாகியான மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை 2 முறை தேசிய கொடி ஏற்றியுள்ளார்.
- சரண்சிங் சவுத்ரி ( 1979-80), வி.பி.சிங் (1989-90), தேவகவுடா ( 1996-97), ஐ.கே.குஜ்ரால் (1997-98) ஆகிய நான்கு பிரதமர்களும் ஒரு முறை சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
- அதேசமயம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தும் குல்ஜரிலால் நந்தா மற்றும் சந்திரசேகர் இருவருக்கும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஃபேக்ட் செக்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion