மேலும் அறிய
Advertisement
Madurai: கோயில் திருவிழாவில் மோதல்.. காயம் ஏற்பட்டோருக்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர் !
மோதலின் போது காயமடைந்தவர்களுக்கு, வீடுகளில் உரிமையாளர்களுக்கு, மற்றும் பைக்,கார் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவியை காசோலையாக வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமோகூர் கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக வீடுகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட விவாரத்தில் 9 பிரிவின் கீழ் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நிவாரண உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அருகே திருமோகூர் பகுதியில் கோயில் திருவிழாவின் போது சில தினங்களுக்கு முன்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் தண்டபானி என்பவர் அளித்த புகாரின் கீழ் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்பிரபாகரன்,பிரபு, முகேஷ், ஆகாஷ், நேரு,மாதேஷ், சூர்ய பிரகாஷ், அருண், ஸ்ரீகாந்த், வைர பிரகாஷ், அர்ஜூன், சாந்தகுமார், சிவா, ராஜேந்திர பாண்டி, சந்துரு உள்ளிட்ட 24க்கும் மேற்பட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 12 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த மோதலில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள திருக்குமார், பழனிக்குமார், செல்வக்குமார், மணிமுத்து ஆகிய 4 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த மோதலுக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என்பதால் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பாக ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் திருமோகூர் பகுதியில் காவல்துறையினரை அதிகளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நிவாரண உதவிகளை வழங்கினார். மோதலின் போது காயமடைந்தவர்களுக்கு, வீடுகளில் உரிமையாளர்களுக்கு, மற்றும் பைக், கார் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவியை காசோலையாக வழங்கினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Arikomban: போக்கு காட்டி வந்த அரிகொம்பன் - யானையை வனத்துறை பிடித்தது எப்படி..?
மேலும் செய்திகள் படிக்க -High Court Madurai : அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக்கோரிய வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு....
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion