மேலும் அறிய
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : X
- நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின் மூலம் ஒன் டு ஒன் கலந்துரையாடல்.
- மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று என்டிஏ கூட்டணி தொடர்பாக இபிஎஸ்-ஐ சந்தித்து முதற்கட்ட ஆலோசனை மேற்கொள்ள சென்னை வருகை.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக தலைமை 20 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், இந்த முறை பாஜக கூடுதலான இடங்களை, அதாவது 45 இடங்களை கேட்க உள்ளதாக தகவல்.
- தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையிலேயே சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து வரலாறு காணாத உச்ச விலையை எட்டியது. ஒரு கிராம் ரூ.12,770-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,160-க்கும் விற்பனை.
- சென்னை விமான நிலையத்தில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி.
- குடிநீர் விற்கும் நிறுவனங்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் புதிய தரப் பரிசோதனை விதிகள் கட்டாய அமல். பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்போருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு.
- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்ததோடு, படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்.
- நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி. காலை 10 முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம் என அறிவிப்பு.
- சிவகாசியில், குடும்பத் தகராறில், மனைவி, மகள், மகன், உறவினர் பெண் ஆகியோரை தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சி. தீ வைத்தவர் உட்பட 5 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















