மேலும் அறிய
Advertisement
"வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை கருத்தில்கொண்டு பணிசெய்ய வேண்டும் - நீதிபதி கருத்து
நமது அரசாங்க முத்திரையில் உள்ள முழக்கம் "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை ஒவ்வொரு அரசு ஊழியரும் கருத்தில் கொண்டு பணி செய்ய வேண்டும்.இது ஒவ்வொரு அரசு ஊழியரின் பொறுப்பாகும் - நீதிபதி
வாய்மையே, உண்மையே வெற்றி பெறுகிறது. எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுவது இது ஒவ்வொரு அரசு ஊழியரின் பொறுப்பாகும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி
பிளக்ஸ் போர்டு தொடர்பான மனு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசிக்கும் மனோஜ், அருண் குமார், புவனேஷ், ராஜா, வசந்த குமார் உள்ளிட்டோர் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்ததாக எங்கள் மீது பரமக்குடி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் காட்டு பரமக்குடி விவசாயப் பண்ணைக்கு அருகில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஃப்ளெக்ஸ் போர்டை வைத்தனர். எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது மனு தாரர் தரப்பில் ”குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஃப்ளெக்ஸ் போர்டில் ஆட்சேபனைக்குரிய விளம்பரம் ஏதும் அமைக்கவில்லை. பலர் அனுமதி இல்லாமல் பிளெக்ஸ் போர்டு வைத்த நிலையில் எங்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்றார்.
இதை தொடர்ந்து நீதிபதி.. வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர்கள் எழுப்பிய காரணங்களை விசாரணையின் போது விசாரணை அதிகாரி நன்கு பரிசீலிக்க முடியும். எஃப்.ஐ.ஆர்., என்பது காவல்துறையின் பதிவேட்டில் புகாரைப் பதிவு செய்வதைத் தவிர வேறில்லை. விசாரணையின் நோக்கம் புகார் உண்மையானதா, இல்லையா என்பதைக் கண்டறிவதாகும். விசாரணை அதிகாரி விசாரணையை நியாயமான முறையில் , வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பிக்கும் சாட்சியங்களைக் கருத்தில் கொண்டு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும். நமது அரசாங்க முத்திரையில் உள்ள "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை கருத்தில் கொண்டும் பணி செய்ய வேண்டும்.
வாய்மையே, உண்மையே வெற்றி பெறுகிறது. எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுவது இது ஒவ்வொரு அரசு ஊழியரின் பொறுப்பாகும். அரசு எதிர்பார்த்தபடி அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை ஆற்றவும், உண்மை மட்டுமே வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மனுதாரர்கள் இந்த விண்ணப்பத்தில் எழுப்பப்பட்ட கருத்துகளை பரிசீலித்து, விசாரணை நடத்தும் அதிகாரி இறுதி அறிக்கையை நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion