மேலும் அறிய
வந்தே பாரத் ரயிலுக்கு பெருகும் ஆதரவு... கூடுதல் பெட்டிகள் இணைப்பால் பயணிகள் மகிழ்ச்சி !
இந்த ரயிலில் மொத்தம் 20 பெட்டிகளுடன் இயங்கும். இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம்.

வந்தே பாரத்
Source : whats app
வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆதரவு அதிகரிப்பதால் செப்டம்பர் 24 முதல் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது.
வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில் இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும், அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்தே பாரத் ரயில்களில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரயிலில் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு
திருநெல்வேலி - சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டபோது எட்டு ரயில் பெட்டிகளுடன் இயங்கியது. பின்பு பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, மேலும் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டன. இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆதரவு அதிகரிப்பதால் செப்டம்பர் 24 முதல் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது.
செப்டம்பர் 24 முதல் 1440 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
எனவே இந்த ரயிலில் மொத்தம் 20 பெட்டிகளுடன் இயங்கும். இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம். தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1128 பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த இருக்கை வசதி பெட்டிகளில் செப்டம்பர் 24 முதல் 1440 பயணிகள் பயணம் செய்ய முடியும். செப்டம்பர் 24 முதல் இணைக்கப்படும் 20 பெட்டிகளில் இரண்டு சிறப்பு இருக்கை வசதி பெட்டிகளும் இருக்கின்றன.” எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















