மேலும் அறிய

நிகிதா புகார்: சிபிஐ விசாரணை 3 மணி நேரம்! அஜித் குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்?

அஜித் குமார் வழக்கில், நிகிதா கொடுத்த நகை புகார் உண்மையா, அந்த நகை எங்கு சென்றது, வேறு யாராவது எடுத்தார்களா என்ற கேள்விகளுக்கான பதில் கிடைத்தால்தான், இந்தக் கொலை வழக்கில் உள்ள சிக்கல்கள் விலகும்.

நகை திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் தொடர்பாக ஐந்து நபர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு
 
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தசூழலில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து காவலர்கள் சிறையில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20- ஆம் தேதி இந்த வழக்கில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, புகார்தாரரான நிகிதா தனது 9.5 பவுன் தங்க நகை குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், அஜித் குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம், நிகிதாவின் புகாரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
ஐந்து பேரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
 
இந்த நிலையில், இன்று மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் மூவர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, கோயிலில் வேலை செய்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், கார் பார்க்கிங் அருகே பழக்கடை வைத்திருந்த ஈஸ்வரன், அஜித் குமாரின் நண்பர் வினோத் குமார், கோயில் ஊழியர் ராஜா, அஜித் குமாரை காவல்துறையினர் விசாரிக்கும் போது வீடியோ எடுத்த சக்திஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
 
கொலை வழக்கில் உள்ள சிக்கல்கள் எப்போது விலகும்?
 
பின்னர் சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர். அஜித் குமார் வழக்கில், நிகிதா கொடுத்த நகை புகார் உண்மையா, அந்த நகை எங்கு சென்றது, வேறு யாராவது எடுத்தார்களா என்ற கேள்விகளுக்கான பதில் கிடைத்தால்தான், இந்தக் கொலை வழக்கில் உள்ள சிக்கல்கள் விலகும் என்று காவல்துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் உலக மரபு வார விழா: தமிழர் பண்பாடு போற்றும் முப்பெரும் கொண்டாட்டம்!
சிவகங்கையில் உலக மரபு வார விழா: தமிழர் பண்பாடு போற்றும் முப்பெரும் கொண்டாட்டம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: சீராய்வு மனு - அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அ)நாளை அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: சீராய்வு மனு - அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அ)நாளை அறிவிப்பு!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: இன்று (21.11.2026) முழு நிலவரம்!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: இன்று (21.11.2026) முழு நிலவரம்!
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
Embed widget