திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
சுமார் ஒரு மணி நேரம் திண்டுக்கல் நகரில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.
திண்டுக்கல்லில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை காலத்தை போன்று வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வீடுகளிலேயே பொதுமக்கள் முடங்கக்கூடிய சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
இதனையடுத்து காலை முதல் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணி நேரம் திண்டுக்கல் நகரில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடந்த 15 தினங்களுக்கு மேலாக வெயிலில் தவித்து வந்த திண்டுக்கல் நகர் மக்களுக்கு வரப் பிரசாதமாக இந்த மழை அமைந்தது. இதேபோல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பாலகிருஷ்ணாபுரம், நாகல் நகர், பேகம்பூர், தோமையார்புரம், செட்டிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, கல்லிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது.
Watch Video: குஜராத் காவல் வாகனத்தில் மது அருந்தும் கைதி - கொந்தளித்த மக்கள்..!
இதேபோல தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்தது. கேரள எல்லை நகர் பகுதிகளான கம்பம், கூடலூர், போடி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன் பட்டி, ஆணைமலையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 3 மணிக்கு சாரல் மழையாக துவங்கிய நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு கனமழையாக மாறியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல, போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழையில்லாமல் இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்களும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.