Watch Video: குஜராத் காவல் வாகனத்தில் மது அருந்தும் கைதி - கொந்தளித்த மக்கள்..!
Drinking Alcohol Inside Police Van video: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறையின் வாகனத்தில் இருக்கும் கைதி மது அருந்தும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Drinking Beer Inside Police Van video: காவல்துறை வாகனத்தில் இருக்கும் கைதி ஒருவர் மது அருந்தும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மது அருந்தும் வீடியோ:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காவல் வாகனத்தில் இளைஞர் ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வானது, அகமதாபாத்தில், உள்ள சபர்மதி ஆற்றங்கரை அருகே நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.
#WATCH | Man Drinks Beer Inside Police Van In Ahmedabad; Video Goes Viral#Gujarat #GujaratNews #ViralVideo pic.twitter.com/TVBBl0FDoQ
— Free Press Journal (@fpjindia) July 12, 2024
அந்த வீடியோவில் உள்ள நபர், மது அருந்துவதை பார்க்க முடிகிறது. மேலும் அவர், காவல் வாகனத்தில் பல மது பாட்டில்களை வைத்திருப்பதை அறிய முடிகிறது. அப்போது மது பாட்டில்கள் முத்தமிடுவதையும் காண முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது நிலையில், பலரும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல சமூக ஊடக பயனர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வானது குஜராத் காவல்துறை மீது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கு எதிரான வலுவான சட்டங்களைக் கொண்ட ஒரு மாநிலத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Also Read: Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ