மேலும் அறிய

பிறரை வசீகரிக்கும் ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? இதை செய்யுங்கள்...!

இந்தக் குறிப்புகளைச் செய்து பார்க்கும்போது மென்மையாக உதடுகளை கையாள வேண்டும். ஒரே நாளில் உதடுகள் நிறம் மாறவில்லையே என அழுத்தித் துடைப்பதோ, மிக அழுத்தமாக உதடுகளைக் கையாள்வதோ கூடாது.

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதில் உதடுகளின் பங்கு மகத்தானது. பேசும் போதும் புன்னகை செய்யும்போதும் உதடுகளின் பங்களிப்பு அதிகம். பிறரை வசீகரிக்கும் உதடுகளைப் பெற அனைத்து பெண்களும் விரும்புவர். 
 
இத்தகைய ரோஜா இதழ்போன்ற உதடுகள் பெற என்ன செய்வது? டிப்ஸ் வேண்டுமா? படியுங்கள் இந்த பதிவை.
 
உடலில் கொழுப்புச் சத்து குறையும்போது, உதடுகள் தானாகவே சுருங்கி விடுகிறது. இதனால் தோற்றத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள்(Green Vegetables), பழங்கள்(Fruits), போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.உதடுகளின் சுருக்கத்தைப் போக்க Vasalin தடவலாம். வைட்டமின் 'E' நிறைந்த sunscreen Lotion தடவிக்கொள்ளலாம். 
 

பிறரை வசீகரிக்கும் ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? இதை செய்யுங்கள்...!
 
அதிக குளிர், மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்காமல் உதடுகள் கறுத்து, தடித்துவிடும். ஒரு சிலருக்கு வெப்பமிகுதியால் உதடுகள் வெடித்துவிடும். இதைப்போக்க பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு(Gooseberry juice) கலந்து, உதடுகளில் தடவி வர, தடிப்பு, வெடிப்பு, கறுமை அனைத்தும் நீங்கி, புதிய சிவந்த நிறம் உதடுகளுக்கு உண்டாகும். உதடுகள் மென்மையாக ஆரஞ்சுபழ சாறுடன் வெண்ணை கலந்து உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். 
 

பிறரை வசீகரிக்கும் ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? இதை செய்யுங்கள்...!
 
மென்மையாக மற்றொரு வழி வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். வாரத்திற்கு மூன்றுநாட்கள் தொடர்ந்து செய்துவர உங்கள் உதடுகள் ரோஜா இதழ்களைப் போன்ற நிறத்துடன் மென்மையாக மாறும். மற்றொரு எளிய வழிமுறையும் உள்ளது. ஒரு சிட்டிகை அரைத்த உளுத்தம் மாவுடன் ஒரு சொட்டு தேன்(Honey) கலந்து குழைத்துக்கொள்ளுங்கள். இந்த பசையை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். ஒரு சில நாட்களில் உங்கள் உதடுகள் மென்மையாக மாறுவதோடு, உதடுகள் ரோஜா இதழ்களின் நிறத்தைப் பெறும்.
 

பிறரை வசீகரிக்கும் ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? இதை செய்யுங்கள்...!
 
பாதாம் பவுடர் சிறிதளவுடன் கொஞ்சம் பாலாடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும். எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்த்தால் உதடுகள் மென்மையாகும். தொடர்ந்து இதை ஒரு வாரத்திற்கு செய்யும்போது ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம். உதடுகளை மென்மையாக்க பெட்ரோலியம் ஜெல்லியையும்(Petroleum jelly) சிலர் பயன்படுத்துகிறார்கள். இதுவும் உதடுகளை மென்மையாக வைத்திருக்க உதவும். மேற்கண்ட குறிப்புகளை செய்து பாருங்கள்! அழகான ரோஜா இதழ்களைப் போன்ற உதடுகளைப் பெற்றிடுங்கள்.
 

பிறரை வசீகரிக்கும் ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? இதை செய்யுங்கள்...!
 
இந்தக் குறிப்புகளைச் செய்து பார்க்கும்போது மென்மையாக உதடுகளை கையாள வேண்டும். ஒரே நாளில் உதடுகள் நிறம் மாறவில்லையே என அழுத்தித் துடைப்பதோ,  மிக அழுத்தமாக உதடுகளைக் கையாள்வதோ கூடாது. அதிக அழுத்தம் கொடுத்து உதடுகளைத் துடைத்தெடுப்பதால் வெப்பம் மிகுதியாகி உதடுகளில் கொப்புளங்கள் ஏற்படலாம். எனவே இந்த டிப்ஸ்களை கையாளும் போது உங்கள் உதடுகளை ரோஜாவின் மேலிருக்கும் பனித்துளியை சேகரிப்பது போல் மென்மையாக கையாளுங்கள்...

தலைப்பு செய்திகள்

பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget