மேலும் அறிய
Advertisement
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்திற்கு எதிராகவும் முழு மதுவிலக்கிற்கும் உறுதியாக இருக்கின்றோம் - திருமாவளவன்
”மேலவளவு படுக்கொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது” - தொல்.திருமாவளவன்.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்ததும் அரசிலமைப்பு சட்டத்தை தொட்டு வணங்கினார் - அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதில் விசிகவின் பங்கு மகத்தானது என திருமாவளவன் பேச்சு
மக்களை அரசியல் படுத்துவோம்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு சாதிய படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேரின் 27-வது நினைவு நாள் மேலவளவு பகுதியில் அனுசரிக்கப்பட்டது. இதில் வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன், அக்கட்சியை சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமாவளவன் தலைமையில் அங்குள்ள விடுதலை களம் என்ற இடத்தில் உள்ள முருகேசன் சிலைக்கு மலர்வளையம் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் வி.சி.க., தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அங்குள்ள மேடையில் பேசுகையில், “முதலமைச்சர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான் தான் என அறிவித்து கொள்கின்றனர். ஆனால் நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். பூமாலை கிடைக்கும் என நினைக்க வேண்டாம் கைவிலங்கிட தயாராக வேண்டும். எனது 27 வயதில் பிரகடனம் செய்தது இதுதான். மக்களை அரசியல் படுத்துவோம். இது என தொடக்க கால அரசியல்.
மது ஒழிப்பு மாநாடு
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால் மக்கள் மதுபானக்கடை மூட சொல்கிறார்கள். மது ஒழிப்பு மாநாடு விசிக சார்பில் நடத்தப்பட உள்ளது. மேலவளவு படுக்கொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு பொறுப்புகள் இருந்தன. அதை செய்யவில்லை. போராட்டம், பேரணி என அரசியல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும் என நினைத்தவன் திருமா. அவ்வாறு செய்து இருந்தால் இந்த இயக்கம் வளர்ந்திருக்காது. விசிக நாடாளுமன்றம் வரை சென்று இருக்காது. ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டால் 174 CRPC காவல்துறை போட்டனர். இந்த ஆணவம், அலட்சியம் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களை சாதி வெறியர்கள், காவல்துறை கூட தாக்கும். ஆனால் சாதாரண வழக்கில் குற்றவாளிகளை தப்பவிடுவார்கள். சாதி சார்பு தான் காவல்துறைக்கு இருக்கும். அது எந்த ஆட்சியில் இருந்தாலும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வழக்கு பதிந்தால் அதை ஆய்வாளர் இல்லாமல் டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். அதிகாரி என்பது நம்பிக்கை. 10 சதவீத பேர் தான் நேர்மையாக இருக்கின்றனர். நேற்று ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு போடுகின்றது காவல்துறை. யாராக இருந்தாலும் போலீசுக்கு என ஒரு ஆடிடூட் இருக்கின்றது. வி.சி.க அங்கீகாரம் பெற்ற இயக்கம் , 4 எம்.எல்.ஏ, 2 எம்.பி என தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது. மோடிக்கு எதிரான அரசியல் சட்டமைப்பு ஆபத்து என சொன்னதில் விசிக பங்கு உள்ளது. பாஜகவுக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் யுக்தம். இதை பிரகடனம் செய்தது விசிக. நாடாளுமன்றத்துக்கு வந்ததும் முதலில் அரசமைப்பு சட்டத்தை தொட்டு தலைவணங்கினார் பிரதமர் மோடி. கள்ளக்குறிச்சி விஷச்சாரயத்திற்கு எதிராகவும் முழு மதுவிலக்கிற்கும் உறுதியாக இருக்கின்றோம். செப்- 17 அன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion