கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக கோரி அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .
கள்ளக்குறிச்சியில் விஷம் சாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக அரசை கண்டித்து தேனியில் தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளச்சாராய மரணம்:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக கோரி அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் தமிழக அரசை கண்டித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பியும் மு. க ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
உருவபொம்மை எரிக்க முயற்சி:
பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறிமுதல் செய்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து பதவி விலகு, பதவி விலகு, முதலமைச்சரே பதவி விலகு என்ற கன்டனகோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் அனுமதி மறுத்ததை மீறி, தமிழக அரசை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க.வினரை விரட்டி, விரட்டி காவல்துறையினர் கைது செய்த சம்பவத்தால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனியில் ஆர்ப்பாட்டம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து தேனி மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Breaking News LIVE: மஹாராஷ்ட்ராவில் ஓபிசி சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம்
அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி வந்த பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றதால் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை விரட்டி , விரட்டி போலீசார் கைது செய்து சம்பவத்தால் தேனி பழைய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.