பெயர் மாற்றம் செய்ய ரூ. 8 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயல் அலுவலர் கைது
கம்பம் அருகே வீட்டுவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூபாய் 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலராக சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார். இவரிடம் அதே ஊரில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சிவானந்தன் என்பவர் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் அவருக்கு கிடைக்கப்பெற்ற வீட்டிற்கு தேவையான உரிய ஆவணங்களுடன் சென்று வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ஊராட்சி செயலர் சந்திரசேகரனிடம் மனு செய்துள்ளார்.மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி செயலர் சந்திரசேகரன் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
அதன்பின் மனுதாரர் சந்திரசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கைக்கு எடுத்து கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெயர் மாற்றம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். அதனையும் பொருட்படுத்தாமல் ஊராட்சி செயலர் சந்திரசேகரன் மேலும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனுதாரர் ஊராட்சி செயல் அலுவலர் சந்திரசேகரனை சந்தித்து ரசீது பெயர் மாற்றம் செய்வதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரே கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி - நல்ல மகசூல், வருவாய் ஈட்டும் விவசாயிகள்
அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் செயலரும் சேர்ந்து ரூபாய் பத்தாயிரம் லஞ்சப் பணம் வேண்டும் என கேட்டதாக கூறி புகார்தாரர் சிவானந்தன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலினை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த போலீசார் ரூபாய் 8 ஆயிரம் ரொக்க பணத்தை ரசாயனம் தடவி சிவானந்தன் இடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி செயலர் சிவானந்தனை பணத்துடன் கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஊராட்சி செயலர் சந்திரசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூபாய் 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.