செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சட்ட போராட்டத்தை சந்தித்த பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி நாள் விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணி
ஆராய்ச்சி நாள் விழா - மருத்துவத் துறை வரலாற்றில் மகத்துவமான நாள். இதே நாளில் கடந்த ஆண்டு முதல் ஆராய்ச்சி நாள் துவங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கென தனி ஆராய்ச்சி மையம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 இடங்களில் சிறப்பு மருத்துவமனைகள் அமைய இருக்கிறது.
36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. 6 மருத்துவ கல்லூரிகள் 2021 க்கு பிறகு துவங்கப்பட்டது. மருத்துவ கல்வியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் 3 நாள் மாநாடு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் 11 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றதாகவும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சர் இது தொடர்பாக முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சட்டபோராட்டத்தை சந்தித்த பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது சட்டத்துறைக்கு நன்றி என தெரிவித்தார்.