அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்.. அரசு மருத்துவமனையில் நிரம்பி வழியும் நோயாளிகள்
குடிநீரை காய்ச்சி குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவதோடு, போதிய மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பு.
தேனி: வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.
Breaking News LIVE 11th NOV : கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் : கமல்ஹாசன்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்தது. தற்பொழுது கடந்த நான்கு நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பெரியகுளத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவில் 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்காக வெளி நோயாளிகள் பிரிவில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். பிரச்சனை குறித்து பெரியகுளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இணை இயக்குனர் ரமேஷ் பாபுவிடம் கேட்டபோது தொடர் மழை பெய்து நான்கு நாட்களாக மழை இல்லாமல் வெயில் அதிகரிப்பு மற்றும் மழையினால் கலங்கிய குடிநீர் விநியோகம் செய்தது உள்ளிட்ட காரணத்தால் வைரஸ் காய்ச்சல் வழக்கத்தை விட 70% அதிகரித்துள்ளதாகவும்,
Sanju Samson : "நேற்று ஹீரோ, இன்று ஜீரோ" சஞ்சு சாம்சன் பெயரில் இப்படி ஒரு சாதனையா!
உள்நோயாளிகள் பிரிவில் குழந்தைகள் பெண்கள் உட்பட 18 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெளி நோயாளிகள் பிரிவில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்வதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி வருவதாக தெரிவித்ததோடு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ள நிலையில் இதுவரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை என மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
”பெரும் பரபரப்பு” நடுவானில் விமானத்தில் பிடித்தது தீ - பயணிகள் கதி என்ன..?
குறிப்பாக தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லை மாவட்டமாக இருப்பதால் இரு மாநில எல்லைகளில் இரு மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறையினர் அவ்வப்போது இரு மாநில எல்லையில் மருத்துவ பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து பெரும்பாலும் வரக்கூடியவர்கள் கம்பம், போடி பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைக்கு வருவதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று பாதிப்பில் வருபவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக கூறப்படுகிறது.