”பெரும் பரபரப்பு” நடுவானில் விமானத்தில் பிடித்தது தீ - பயணிகள் கதி என்ன..?

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போதே அதன் என்ஜினியில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தாலியின் ரோம் நகரில் இருந்து சீனா புறப்பட்டுச் சென்ற HU48 என்ற விமானத்தில் தீப்பிடித்தது, கட்டுப்பாட்டை விமானம் இழக்கும் முன்னரே துரிதமாக செயல்பட்ட விமானிகள் மீண்டும் விமானத்தை ரோம் நகர விமான நிலையத்திற்கே திருப்பிக் கொண்டுவந்து பத்திரமாக தரையிறக்கினர். யாருக்கும் எந்த ஆபத்துமின்றி பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னரே விமான கிளம்பிச் சென்ற நிலையில், நடுவானில் விமானத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த விசாரணைக்கு இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)




















