Breaking News LIVE 11th NOV: மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும்தான் - விளாசும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Background
- உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்பு – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
- பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் வரவேற்பு
- திராவிடம் வேறு; தமிழ் தேசியம் வேறு என்று கூறுவது அரசியல் அறியாமை – சீமானுக்கு திருமாவளவன் பதில்
- வங்கக்கடலில் இன்று அல்லது நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
- கருணாநிதிக்கு பிறக்கவில்லை என்றால் மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு
- டெல்லி கணேஷ் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி – முதலமைச்சர், தலைவர்கள் இரங்கல்
- திருச்சி விமான நிலையத்தில் சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – மலேசியாவில் இருந்து வந்த பயணிகளிடம் விசாரணை
- மறைந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உடலுக்கு நடிகர் சந்தானம் நேரில் அஞ்சலி
- தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு; கஸ்தூரியைப் பிடிக்கத் தனிப்படை அமைப்பு
- கோவை புறநகர் பகுதிகளில் உள்ள தாபாக்களில் சட்டவிரோத மது விற்பனை – போலீசார் அதிரடி சோதனை
- திருச்சியில் பேருந்து மீது மோதிய கார் – அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
- மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரம் ஊக்கத்தொகை – மகாராஷ்ட்ராவில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது காங்கிரஸ்
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு பல நாடுகள் அச்சத்தில் உள்ளன; ஆனால் இந்தியாவுக்கு கவலை இல்லை – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
- மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது
- ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
Breaking News LIVE: பாஜகவுடன் கூட்டணி கிடையாது - பொன்னையன்
பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜவுடன் ஒட்டும் இல்லை, உரவும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக உறுதியாக அறிவித்துவிட்டது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும் தான் எனத் தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் வரும் 15ஆம் தேதி வரை கனமழை தொடரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















