பம்பா நதிக்கரையில் கிடக்கும் துணிக்கழிவுகள்- தமிழ்நாட்டில் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி
கேரளா பம்பா நதிக்கரையில் கிடக்கும் துணிக்கழிவுகள் தமிழக விவசாய நிலங்களில் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடி தோஷத்திற்காக ஆற்றில் கழட்டி விடப்பட்ட துணிகளை தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு அருகே கொண்டு வந்து கொட்டியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தன் திட்டாவில் சர்வதேச புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் நிகழ்வாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பம்பையில் உள்ள பம்பா நதியில் புனித நீராடி தாங்கள் அணிந்து வந்த ஆடைகளை ஆற்றில் கழற்றி விட்டு சாமி தரிசனம் செய்ய செல்வது ஐதீகமாக உள்ளது.
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
அவ்வாறு பக்தர்கள் கழட்டி விடும் ஆடைகள் அனைத்தையும் தேவஸ்சம்போர்டு சார்பாக துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தனி நபருக்கு ஒப்பந்தம் அளித்து டெண்டர் விட்டு துணிகளை அள்ளி சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் அங்கு எடுத்து வந்த தோஷகழிவு துணிகளை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் விளை நிலத்தில் கொட்டியதால் சுகாதார சீர்கேடு கொசு உற்பத்தி அதிகரிக்க கூடும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மேலும் கேரளாவில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகள் தமிழகத்திலிருந்து வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்படும் விளை பொருட்களின் கழிவுகளை இவை அனைத்தையும் தமிழகப் பகுதியில் கொட்டப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சபரிமலை கழிவுகளை தமிழக பகுதிக்கு கொண்டு வந்து கொட்டியது அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கு என சமூக ஆர்வலர்கள் கூறினர்.