தொடங்கியது சபரிமலை சீசன்..பக்தர்கள் நன்மைக்காக புதிய APP அறிமுகம்!

Published by: ஜான்சி ராணி

மகர விளக்கு பூஜை

சுருளி அருவியில் புனித நீராடி குருசாமி கைகளால் மாலை அணிந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக விரதம் தொடங்கினார்கள்.

மாலை போடும் வழக்கம்..

சுருளி அருவிக்கு வந்து புனித நீராடி ஐயப்பனுக்கு பிடித்த வண்ணங்களான காவி மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து துளசி மாலை,சந்தன மாலை, குங்கும மாலை,மற்றும் காசி மாலை அணிவர்.

பக்தி

சுருளி மலை பகுதியில் உள்ள ஐயப்ப சாமி கோவில், பூத நாராயணர் கோவில் ஆதி அண்ணாமலையார் கோவில் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் குருசாமிகள் மூலமாக மாலைகளை தங்கள் கழுத்தில் அணிந்து செல்வது வழக்கம்.

மண்டல பூஜை

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 15-ந்தேதி நேற்று மாலை திறக்கப்பட்டது.

அரசு நடவடிக்கை

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக கேரள மாநில அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

Swami chatbot

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜைகள் செய்யும் நேரம், போக்குவரத்து வசதிகள் பற்றி தெரிந்துக் கொள்ளும் வகையில் Swami chatbot என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது கேரள அரசு.

AI

இந்த செயலில் AI (Artificial intelligence) தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய ஆறு மொழிகளில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு..

சபரிமலையில் கோவில் நடை திறப்பு, பூஜை நேரம், வெளி மாநிலத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு பாதை தடம் மாறாமல் சபரிமலை கோவில் வந்தடைய வேண்டிய பல்வேறு வழித்தடங்களை காட்டும்.

அருள் கிடைக்க..

ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைப்பதற்காக விரதம் இருக்கலாம்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.