தேனி: நில அபகரிப்பு; போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காசிமாயன் என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நில அபகரிப்பு, அடுத்தவர் நிலத்திற்கு போலியான ஆவணம் தயாரித்து மோசடி செய்வது இது போன்ற நிலம் சம்பந்தமான பல்வேறு புகார்களும், நீதிமன்றத்தில் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தவண்ணம் உள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்றால் ஆண்டுகணக்கில் வழக்குகள் முடியாமல் இழுத்தடிக்கும் சூழல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களாக நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு விதிக்கப்படும் தீர்ப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்னும் 14 நாட்களில் 13ம் ஆண்டு திருமண நாள்.. மீனாவின் இன்ஸ்டா சொல்லும் நினைவுகள்!
அப்படி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அய்யனத்தேவன்பட்டியை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 61). இவர், தனது தந்தை வெள்ளைச்சாமி பெயரில் இருந்த நிலத்தை சிலர் அபகரித்து, மற்றொருவருக்கு விற்பனை செய்து விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, காசிமாயன் போலீசாரிடம் ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் அம்மா வீணை வாசிப்பார்.. அப்பா புடவையை கொளுத்துவார் - ’ஜெ’வின் மறுபக்கம்!
அந்த ஆவணத்தின் உண்மைத்தன்மையை போலீசார் அறிய முயன்ற போது, அது போலியான ஆவணம் என்று தெரியவந்தது. இதையடுத்து போலியான ஆவணத்தை கொடுத்த காசிமாயன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி தீர்ப்பளித்தார்.
கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றப்பட்ட மது! காரில் வன்கொடுமை - செங்கல்பட்டில் செவிலியருக்கு கொடூரம்!
அதில், போலி ஆவணம் தயாரித்ததற்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாத கடுங்காவல் சிறை தண்டனை, போலியான ஆவணத்தை பயன்படுத்தியதற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாத சிறை தண்டனை, பொய்யான புகார் கொடுத்ததற்கு 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்