மேலும் அறிய

இன்னும் 14 நாட்களில் 13ம் ஆண்டு திருமண நாள்.. மீனாவின் இன்ஸ்டா சொல்லும் நினைவுகள்!

“கண்ணழகி” என ரசிகர்களால் அழைக்கப்படும் மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார்.

நடிகை மீனா இன்னும் 14 நாட்களில் தனது 13 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில் அவரது கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  குழந்தை நட்சத்திரமாக 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 

“கண்ணழகி” என ரசிகர்களால் அழைக்கப்படும் மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவை 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மீனா திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். 

இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றிலிருந்து மீண்டாலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை தீரவேயில்லை.இது புறாவின் எச்சத்தை சுவாசிப்பதால் உடலினுள் பரவும் ஒருவித கிருமி பாதிப்பு காரணமாக நுரையீரலை தாக்கியது என கூறப்படுகிறது. 

ஒருபுறம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில்,மறுபுறம் வித்யாசாகருக்கு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்றிரவு உயிரிழந்தார். 48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில்  பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

மேலும் மீனா இன்னும் 14 நாட்களில் தனது 13 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில் கணவரின் மரணம் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் கடந்தாண்டு திருமண நாளின் போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வரவேற்பில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வானவில் போல என் வாழ்வில் வந்து அதை அழகாக வண்ணமயமாக்கினாய் என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget