மேலும் அறிய
Advertisement
கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றப்பட்ட மது! காரில் வன்கொடுமை - செங்கல்பட்டில் செவிலியருக்கு கொடூரம்!
இது தொடர்பாக சரவணன் என்பவரை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள , சரவணன் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் பெண் வேறு இடத்திற்கு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியில் சேர்வதற்காக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகளுடன், பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்த தகவலையும் சரவணனிடம் பகிர்ந்துள்ளார். சரவணன் தானும் தன்னுடன் வருவதாக கூறியுள்ளார், ஆனால் செவிலியர் மறுத்துள்ளார்.
இதனை எடுத்து சரவணன் தனது நண்பர்களான சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில், வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனெடுத்து அப்பெண்ணை நள்ளிரவில் செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
போதை தெளிந்து வீட்டிற்கு சென்ற பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பெண்ணிடம் விசாரித்ததில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து உடனடியாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion