தொழில்முனைவோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த திருப்பூர் துணிநூல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் – தேனி ஆட்சியர்
திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0421 – 2220095 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜவுளித்துறையில் திறன்மிக்க பயிற்சியாளர்களை உருவாக்கவும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கவும், தொழில்முனைவோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருப்பூர் துணிநூல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு துணிநூல் துறையானது 21.10.2021 முதல் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, பொதுநிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வலுவான வளர்ச்சிக்கு செயலாற்றி வருகிறது.
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
ஜவுளித்துறை மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஜவுளிதுறையின் நலனை மேம்படுத்தி வருகிறது. ஜவுளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதியதொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், தொழில்துறை மற்றும் கல்வித்துறைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகிய முன்னெடுப்புகளின் மூலம் ஜவுளிதுறையில் புதுமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் ஜவுளிதொழிலின் தேவைகளை பூர்த்திசெய்யும் முகமாக திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கவும், தொழில்பயிற்சி அளிக்கும் நிலையங்கள் மற்றும் தொழில்சங்கங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கவும், ஜவுளித்துறையினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களிடைய தொழில்நுட்ப ஜவுளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ஜவுளி பொருட்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்தும் பொருட்டு பன்னாட்டு வணிக கூட்டண்மைகளை ஆராய்தல், வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல் மற்றும் மண்டல வாரியாக ஜவுளி நுட்பங்களை வெளிப்படுத்த டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Muthukadu Floating Restaurant: சென்னையை அசத்த போகும் முட்டுக்காடு மிதவை உணவகம்.. அப்டேட் என்ன ?
துணி நூல் துறையானது மாநிலத்தில் முக்கிய ஜவுளி குழுமங்கள் அமைந்துள்ள சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது. தற்பொழுது புதிய துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா, நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜவுளித்துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல்துறை, அறைஎண். 502, ஐந்தாம்தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0421 – 2220095 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.