Breaking News LIVE:டாணா புயல் எச்சரிக்கை! 14 மாவட்டங்களுக்கு வரும் 25ம் தேதி வரை எச்சரிக்கை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

Background
டாணா புயல் எச்சரிக்கை! 14 மாவட்டங்களுக்கு வரும் 25ம் தேதி வரை எச்சரிக்கை
டாணா புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசாவின் 14 மாவட்டங்களுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE:சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இயக்கப்படும் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06103) நவம்பர் 02, 04, 06, 09, 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) நவம்பர் 03, 05, 07, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, டிசம்பர் 1 ஆகிய வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
Breaking News LIVE:கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்- தமிழக அரசு ஆணை!
கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள்மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Breaking News LIVE:Vintage சிம்புவை திரும்ப கொண்டு வந்தது எப்படி? - இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்த ரகசியம்!
A moment to remember as it was first day at work with STR ❤️🔥⭐️ @SilambarasanTR_ #Vintagestrmood #AGS27 pic.twitter.com/KdKdnDxwIj
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 22, 2024
Breaking News LIVE: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்து! சிறுமி உயிரிழப்பு!
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 வயது சிறுமி உமையாள் தாயின் கண் முன்னே உயிரிழந்ததார். பள்ளி முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றபோது விபத்து நடந்துள்ளது. லாரி ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

