State Government Award: தேனியில் சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு ’மாநில அரசு விருது’.. அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
தேனி மாவட்டத்தில் உள்ள 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைள் மாநில அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் “மாநில அரசு விருது” பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
"கேரள சகோதரர்கள் அன்புக்கு நன்றி" வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழக அரசின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் “பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் மற்றும் வேறு வகையில் சிறப்பான ,தனித்துவமான சாதனை செய்திருத்தலும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஓவியங்கள், கவிதைகள், மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல் போன்ற சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக மாநில அரசின் விருது தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
அதேபோன்று, வருகிற 24 ஜனவரி 2024ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (டிசம்பர் 31ன் படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தைகள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும். இதற்கான படிவத்தை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்று இணையதளத்தில் பதிவு செய்தபிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா இரண்டு நகல்கள் அனுப்பிட வேண்டும்.
இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒகுவதி), காவல்துறை,தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவிலான தேர்வு குழு மூலம் கூர்ந்தாய்ந்து மேற்காணும் விருதினை பெற உரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு 24.01.2024 அன்று மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.