மேலும் அறிய
Advertisement
ஒரு பில்ல போட்டுட்டு 9 முறை கனிம வளம் அள்ளும் மோசடி கும்பலுக்கு நீதிமன்றம் செக்...!
”ஒரே ஒரு அனுமதி சீட்டு பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள், மணல் ஏற்றிச்சென்றால் குவாரிகளின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும்” கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’’
நாகர்கோவிலை சேர்ந்த டென்னிஸ்கோல்டு என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில் ’’நாகர்கோவில் மண்டல கல், மணல் ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளராக உள்ளேன். குவாரிகளில் இருந்து ஒவ்வொரு யூனிட் மணல், கற்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள தொகையை நாங்கள் வரியுடன் செலுத்தி, அவற்றை எடுத்து வருகிறோம்.
இதை சற்று கவனிக்கவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
ஒவ்வொரு முறையும் லாரி ஏற்றிச்செல்லும் பொருளுக்கான அடையாள அட்டையை (அனுமதி சீட்டு ) கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களின் கனிமவள அதிகாரிகள் வழங்குகின்றனர். இந்த அடையாள அட்டையில் கனிமவள அதிகாரிகள் சீல் வைத்து, குவாரியை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். அவர்களிடம் எங்கள் லாரி டிரைவர்கள் பெற்றுச்செல்லும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த அடையாள அட்டையில் வண்டி எண், தேதி, நேரம், பயண நேரம், இடம் என அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும். லாரியில் ஒவ்வொரு நடைக்கும் தனித்தனியாக பாஸ் வழங்கப்பட வேண்டும்.
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
ஆனால் குவாரிகளில் இருந்து பொருட்களை எடுத்து செல்லும் குறிப்பிட்ட சில லாரிகளில் ஒரேயொரு பாஸ் மூலம் பலமுறை மணல், கற்களை ஏற்றிச்செல்கிறார்கள். இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பாஸ்களில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் எழுத வேண்டும் என ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை முறையாக பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், மனுதாரர் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதி, குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள், தங்களுக்கான பாஸ்களில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். இதை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். மீறும் குவாரிகளின் லைசென்சை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion