Theni: சுருளியாறு மின்நிலையம் அருகே முகாமிட்டுள்ள யானைகள்; வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை
லோயர்கேம்ப் அருகே சுருளியாறு மின்நிலையம் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை, மங்களாதேவி மலையடிவார பகுதி பளியன்குடியிருப்பு, அத்தி ஊத்து, மாவடி, வட்டத்தொட்டி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில் அரியவகை மரங்கள் மற்றும் காட்டு விலங்குகளான யானை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இங்குள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவதையும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!
இதில் வனப்பகுதியையொட்டிய லோயர்கேம்ப் நாயக்கர் தொழு சாலை, குள்ளப்ப கவுண்டன்பட்டி, மின்நிலையம் சாலை ஆகிய இடங்களில் வனத்துறையினர் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மழைக்காலங்களில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் எளிதில் கிடைக்கிறது.
இந்தநிலையில் தற்போது வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் வறண்டு போனது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் தேடி குட்டிகளுடன் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுருளி அருவி பகுதிக்கு இடம் பெயர்ந்தன. 2 நாட்களாக அங்கேயே யானைகள் முகாமிட்டன. இதனால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் திடீரென்று தடை விதித்தனர்.
இதற்கிடையே அங்கிருந்த காட்டு யானைகள் நேற்று உணவு தேடி சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதனால் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மின்நிலைய பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்