மேலும் அறிய

அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லியில் சந்தித்து காவிரியில் இருந்து நீர் திறந்து விடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜூன் மாதம் சுமார் 26 டி.எம்.சி. வரையில் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளனர்.  

"தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்"

இதன் காரணமாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லியில் சந்தித்து காவிரியில் இருந்து நீர் திறந்து விடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். 

இந்த நிலையில், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை போக்கும் வகையில் கர்நாடகா, காவிரி நீரை தமிழ்நாடுக்கு திறந்து விட உள்ளது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுகையில், "கர்நாடக குடிநீர் தேவையை கருத்தில் கொண்ட பிறகே காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

போதுமான மழை பெய்யவில்லை என்ற போதிலும், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். கர்நாடகாவில் நீர்வளத்துறை அமைச்சகத்தை கவனித்து வரும் சிவகுமார், இதுகுறித்து விரிவாக பேசுகையில், "மாநிலத்தில் பருவமழை பெய்யாததால் போதிய தண்ணீர் இல்லை. மாநிலத்தில் ஓரிரு நாட்களில் கொஞ்சம் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், துயரமான சூழலே நிலவுகிறது" என்றார்.

டெல்லிக்கு பறந்த தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம்:

காவிரி நீர் கேட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியிருப்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சிவக்குமார், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை கண்டிப்பாக மதிக்க வேண்டும். போதிய மழை பெய்யவில்லை, ஆனாலும் மதிக்க வேண்டும். 

எந்தத் தண்ணீர் கிடைக்கிறதோ, அதைத் திறந்துவிடத் திட்டமிட்டுள்ளோம். கண்டிப்பாக, அதை மதிப்போம். கர்நாடக குடிநீர் தேவையை மனதில் கொள்ளாமல் தண்ணீரை வெளியிட முடியாது. கடந்த 2-3 ஆண்டுகளாக மாநிலத்தில் நல்ல மழை பெய்தாலும் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை" என்றார்.

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 

2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget