ABP Exclusive: தாறுமாறாக சென்ற பி.டி.ஓ., ஜீப்; மது போதையில் விபத்தை ஏற்படுத்திய அரசு ஓட்டுநர்
மானமதுரை யூனியனுக்கு நெருக்கமான அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என புகார் எழுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்திற்கு கீழ் ஏராளமான அரசு ஜீப்கள் மற்றும் கார்கள் இயங்குகிறது. உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் இது போன்ற ஜீப் உள்ளிட்ட கார்களை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் மானாமதுரை யூனியனுக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.) ஜீப்பை இயக்கும் ஓட்டுநர் மலைராஜ், மது போதையில் வாகனத்தை தனியாக இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மானாமதுரை காந்தி சிலை அருகே ஜீப்பை தாறுமாறாக ஓட்டிவந்த போது கொண்ணக்குளம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் மீது ஜீப் மோதியது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதிக்குள் தாறுமாறாக வந்த ஜீப் பெண் ஒருவர் மீது விபத்தை ஏற்படுத்தியது. மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப்பை ஓட்டிவந்த ஓட்டுநர் மலைராஜ் மது போதையில் இருந்ததால் பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். அதன் வீடியோ காட்சிகள். pic.twitter.com/IBLcu9LBNi
— Dheepan M R (@mrdheepan) August 22, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்