மேலும் அறிய

BSNL Introduced Wi-Fi calling facility: மொபைலில் சிக்னல் இல்லையா.!இனி கவலையே வேண்டாம்- புதிய Wi-Fi வசதியை அறிவித்த BSNL

BSNL Introduced Wi-Fi calling facility: வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில் பயன்படும் வகையில் வைஃபை காலிங் வசதியை BSNL அறிமுகம் செய்துள்ளது.

நவீன காலத்தில் மாறி வரும் தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளும் மாறி வருகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் தெருவிற்கு ஓரிரு இடத்தில் மட்டுமே தொலைபேசி இருந்த நிலையில் தற்போது வீட்டில் 4 பேர் இருந்தால் அனைவருக்கும் தனிதனி மொபைல் போன் பயன்பாட்டில் உள்ளது. இருக்கிற இடத்தில் இருந்து எது வேண்டும் என்றாலும் ஆர்டர் செய்யலாம். அப்படி வசதிகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் குறிப்பாக மலைப்பகுதிகள், பாலைவனப்பகுதிகளில் மொபைல் போன் சிக்னல் கிடைக்கா நிலை இன்னமும் நீடித்து வருகிறது.

இதனையடுத்து  வைஃபை காலிங் வசதியை BSNL அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் மொபைல் நெட்வொர்க் இல்லாத இடத்தில் வைஃபை (Wi-Fi) இணைய இணைப்பு வழியாக குரல் அழைப்புகளையும், SMS அனுப்புவதற்கு மொபைல் சேவை வழங்கப்படுகிறது. இந்த வசதியானது மோசமான செல் சிக்னல் உள்ள இடங்களில் அழைப்புகளைத் துல்லியமாக மேற்கொள்ள உதவுகிறது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம்

இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு தழுவிய அளவில் வைஃபை அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.

Wi-Fi calling facility- யாருக்கெல்லாம் பயன்

வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசிகளில் வைஃபை காலிங் என்பதை மட்டும் செட்டிங்ஸ் அமைப்பில் இயக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சாதன இணக்கத்தன்மை மற்றும் உதவிக்கு, அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற பிஎஸ்என்எல் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget