மதுரையில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த 3 பேர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு - கொலை மற்றும் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சிக்காக மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வைகையாற்று பகுதிக்கு வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகரை தரிசனம் செய்வதற்காக வைகை ஆற்றிற்குள் பல்வேறு பகுதிகளில் இறங்கி தண்ணீரில் குதித்தபடியும் உற்சாகமாக சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள தடுப்பணையில் 40 வயது மதிக்கதக்க ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து வைகை ஆற்றின் கல்பாலம் பகுதியில் 2 சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்புதுறையினர் உதவியுடன் இரு சடலங்களும் மீட்கப்பட்ட ன. அதில் மதுரை விளாச்சேரி ஜோசப்நகர் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பிரேம்குமார் என்ற இளைஞரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு சடலம் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில் 3 உடல்களும் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று காலை மதிச்சியம் பகுதியில் சித்திரை திருவிழாவிற்கு வந்த மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற 23 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் இதேபோன்று மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகை தந்த சுடலைமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் கூட்ட நெரிசலில் வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kallazhagar Festival: கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கூடுதல் செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai: மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார் !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்