மேலும் அறிய
Advertisement
Sivagangai: மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார் !
வீர அழகர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோயில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் விழா இன்று காலை 7:45 மணிக்கு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீரழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார். இதனை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.#sivagangai | #manamadurai #வீரஅழகர் | #கள்ளழகர் @SRajaJourno | @athens_south @dhamurmm91 | @imanojprabakar | @abpnadu pic.twitter.com/9xQnvtpV85
— arunchinna (@arunreporter92) May 5, 2023
இதற்காக நேற்று இரவு வீர அழகர் கோயில் அருகே எதிர்சேவை மண்டகப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிகள் அங்கிருந்து அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு இன்று அதிகாலை வீர அழகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சுவாமி வீதி உலா வந்து பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே காலே 7:45 மணிக்கு வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வெள்ளை குதிரை வாகனத்தில் வீரழகர் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்.
அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகள் வீர அழகர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார். அங்கிருந்து ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் சுவாமிகள் அப்பன் பெருமாள் கோவில் மண்டகப்படிக்கு சென்றடைந்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kallazhagar Festival: ’வாராரு வாராரு அழகர் வாராரு’... பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..!
மேலும் செய்திகள் படிக்க - 9 AM National Headlines: சர்ச்சையில் தி கேரளா ஸ்டோரி படம்.. வருவாயை அள்ளிய ரயில்வே.. இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion