மேலும் அறிய
Advertisement
Crime: அரசு பேருந்துகளுக்கு நடுவே சிக்கி நொறுங்கிய ஆட்டோ - 4 பெண்கள் படுகாயம்
”காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது போன்று விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கைகள் விடுத்தனர்.
” உசிலம்பட்டி அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவே சிக்கி அபே ஆட்டோ விபத்துக்குள்ளானதில் - 4 பெண்கள் படுகாயமடைந்தனர், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உசிலம்பட்டியிலிருந்து - எம். கல்லுப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை உசிலம்பட்டியிலிருந்து வி.பெருமாள்பட்டி நோக்கி சென்ற அபே ஆட்டோ முந்த முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக எதிரே இராஜபாளையத்திலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து என இரு அரசு பேருந்துகளின் நடுவே சிக்கி விபத்துக்குள்ளானது., இதில் அபே ஆட்டோவில் பயணித்த வில்லாணியைச் சேர்ந்த இந்துராணி, வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த குருவம்மாள், சின்னம்மாள், கருப்பாயி என்ற 4 பெண்கள் படுகாயமடைந்தனர்.,
#madurai | உசிலம்பட்டி அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவே சிக்கி அபே ஆட்டோ விபத்துக்குள்ளானதில் - 4 பெண்கள் படுகாயமடைந்தனர், இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#accident | #auto | #cctv | @k_for_krish | @abplive @LPRABHAKARANPR3 pic.twitter.com/NEMo3fYIMH
— arunchinna (@arunreporter92) September 22, 2023
4 பெண்கள் படுகாயம்:
அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த 4 பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான விபத்தில் 4 பெண்களும் உயிர் தப்பியது ஆறுதல். மேலும் இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ ஒட்டுநரை தேடி வருகின்றனர். இரு அரசு பேருந்துகளின் நடுவே அபே ஆட்டோ சிக்கி விபத்துக்குள்ளான கண்காணிப்புக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரைம் தொடர்பான செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - Crime: பெண் போலீஸை கொடூரமாக தாக்கிய நபர்; சுற்றி வளைத்து போட்டு தள்ளிய போலீஸ் - உ.பி.யில் அதிரடி
இது குறித்து சமூக ஆர்வலர் செந்தில் கணேஷ் கூறுகையில், ” உசிலம்பட்டி பகுதியில் அதிகளவு ஷேர் ஆட்டோக்கள் செயல்படுகிறது. இவர்களில் பலரும் ஆட்டோக்களை அலங்கரித்துக் கொண்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டுக்கொண்டு விரைவாக ஓட்டுகின்றனர். திடீர் என்று ஆட்களை பார்த்துவிட்டால் சாலையில் திடீர் என்று நிறுத்துகின்றனர். இது போன்ற செயல்களால் அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது.
அதே போல் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது போன்று விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கைகள் விடுத்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion