Neet exam | 'சிறப்பு மருத்துவ வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' - சிவகங்கை மாணவியின் கோரிக்கை என்ன?
”கூடுதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் ஓபன் கோட்டாவில் தகுதி இருந்தால் அதன் மூலம் மருத்துவ சீட்டை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.”

உயிர்களை காப்பாற்றும் மருத்துவ படிப்பு பலரின் கனவாக இருக்கிறது. மருத்து படிப்பில் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் என மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வருகின்றனர். இதில் பலருக்கும் வாய்ப்பு எட்டாக்கனியாக இருக்கிறது. தற்போது நீட் தேர்வு சவாலை அதிகப்படுத்தியுள்ளது. முழுமையாக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஆறுதலை அளித்தாலும் பல ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கும் நீட் ஒரு தடையாகவே இருக்கிறது.

#Abpnadu நீட் தேர்வில் கிடைக்கும் சிறப்பு வாய்ப்பை அதிகமதிப்பெண் எடுத்த மாணவிகள் விட்டுக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து ஊழியரின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார். 4முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பு எட்டாக் கனியாக இருப்பதாக வேதனை. @SRajaJourno @guna_2403@reportervignesh pic.twitter.com/flJ0GLUb3g
— Arunchinna (@iamarunchinna) February 27, 2022






















