மேலும் அறிய
Advertisement
Tamilrockers Admin Arrest: மதுரையை சேர்ந்த தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கேரளாவில் கைது..
கைது செய்யப்பட்ட தமிழ்ராக்கர்ஸ் அட்மின், ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கேரளாவில் கைது - ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக கைது செய்த கேரள சைபர் கிரைம் போலீசார்.
ராயன் திரைப்படம்
தனுஷ் நடித்துள்ள ராயன் படம் நேற்று முன்தினம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக தமிழ்ராக்கர்ஸை, கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
- Raayan Box Office : கர்ணன் பட வசூலை முந்திய ராயன்.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன தெரியுமா?
திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டர்
தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் மூலம் சட்ட விரோதமாக சினிமாக்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் சினிமா முதலீட்டாளர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை பாதிப்படைந்து வருகின்றனர். இந்த சூழலில் தனுஷ் நடித்த ராயன் படத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்துகொண்டிருந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐந்து நாட்கள் காவல்
இது குறித்து சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ்-இன் மனைவி சுப்ரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பிளஸ் 2 தேர்வில் இரு மாணவர்கள் ஒரே கையெழுத்துடன் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்ற முறைகேடு வழக்கு; 9 பேர் கைது
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Cauvery Flood Warning: கர்நாடகாவில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion