மேலும் அறிய
தி.மு.கவிற்கு எங்கள் கூட்டணியை கண்டு பயம் வந்துவிட்டது - ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வியூகம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
திமுகவிற்கு எதிரியே இல்லை இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி என்று கூறியவர்கள், தற்போது, அதிமுக - பா.ஜ.க கூட்டணி அமைந்ததும் கூட்டணி ஆட்சியா என்று பேசுகிறார்கள், திமுகவிற்கு எங்கள் கூட்டணியை கண்டு பயம் வந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார்,”பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய தயாரா என அவர்களிடம் முன் வைக்க முடியுமா என்று தமிழக முதல்வர் எடப்பாடியை பார்த்து கேட்டதற்கு, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது ஏன் தமிழக முதல்வருக்கு இப்படி ஒரு நில நடுக்கம் ஏற்படுகிறது. நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது புண்ணியமா! நாங்கள் கூட்டணி வைத்தால் அது பாவமா..? என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வியூகத்தை வகுத்து திமுகவை வீழ்த்துவது அனைத்திந்திய அண்ணா திராவிடத்தின் தலைமையிலான முதல் வெற்றி.
ஆட்சி அமைக்கும் நிலைக்கு உருவாகியுள்ளது
திமுகவை எதிர்ப்பதற்கு இடமே இல்லை,.. தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என்ற பேச்சு எழும் அளவிற்கு உருவாகி இருக்கிறது.. ஆகவே இரண்டாம் இடத்திற்கு போட்டி என்பது மாறி தற்பொழுது ஆட்சி அமைக்கும் நிலைக்கு உருவாகியுள்ளது என்பதே பேசு பொருளாகி இருக்கிறது. மக்கள் பிரச்னைக்கு திமுக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்த வேண்டிய விவகாரம் போன்றவை குறித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் மற்றும் கேரள மாநில முதலமைச்சர் வரும்பொழுது பேச தவறிவிட்டார், தமிழ்நாடு முதலமைச்சர். அண்டை மாநிலங்களில் நட்பை பாராட்டி கோரிக்கையை கூட தமிழக முதல் அமைச்சர் வைக்கவில்லை.
தேர்தல் வியூகம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு
திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். வலுவான கூட்டணி அமைந்துள்ளது 2026 இல் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வியூகம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது” என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
ஆன்மிகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















