மேலும் அறிய
Advertisement
மதுரை : ’தமிழ் கல்வெட்டுகளை தமிழ்நாட்டிற்கே ஒப்படைக்க வேண்டும்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு !
’இந்திய அகழாய்வில் கிடைத்த தமிழ் கல்வெட்டுக்களை கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கே ஒப்படைக்க வேண்டும் என’ வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தங்க தென்னரசு தெரிவித்தார்.
திருச்சுழி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே, அந்த படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மைசூரில் உள்ள அலுவலகத்தில் உள்ளது. இதனை தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அங்குள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இன்னும் படிப்பையே காணாத நிலையிலேயே இருக்கும்போது அதன் மூலம் வரலாற்றின் ஒரு பகுதியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுநல ஆர்வலர்கள் பலர் கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்காக நீதிபதிகள் அவர்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேபோன்று தமிழ்நாடு அரசும் அந்த கல்வெட்டுக்கான பிரதிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக உள்ளது. பல மொழி கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய அதிக கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே. எனவே அதிக அளவு தமிழ் கல்வெட்டுகள் இருக்கும்பட்சத்தில் ஏன் அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்படாமல் வேறு மொழிக்காக நியமித்து உள்ளார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கீழடி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
எனவே தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக படி எடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக கேள்வி எழுப்பி உள்ளார்கள், என நினைக்கிறேன். தமிழ் கல்வெட்டுகளை நம்மிடம் அனுப்பி வைக்க வேண்டுமென்பது நம்முடைய கோரிக்கையாக உள்ளது” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிவகங்கை: ஏலம் எடுப்பதில் தகராறு.. நிர்வாகியின் மண்டை உடைப்பு.. தாக்கிக்கொண்ட திமுகவினர்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion