மேலும் அறிய
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில !
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணி துவக்கம்.
![தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில ! Some important news to watch out for in the South Zone! தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/455712fc8d20a7ee0c32174a499f7565_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயர்நீதிமன்ற மதுரை கிளை
1. "தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.” என முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்; சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2. குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக வந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழில் நிறுவனங்கள், கடைகளில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
3. டீசல் விலை உயர்வு, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை இல்லை என்பதால் இராமநாதபுரம் பாம்பன் விசைபடகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தெடங்கியுள்ளனர்.
4. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் கிராம மக்கள் போராட்டம்.
5. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
6.திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்களை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
7. மதுரையில் வீட்டு ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு தீ விபத்து - கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8. உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணி துவக்கம்.
9. திருநெல்வேலியில் சிறுவணிகநிறுவனம் கட்டுவதற்காக அனுமதி பெற்று முறைகேடாக 6 மாடி கட்டடம் கட்டி செயல்பட்டு வந்த டாக்டர் வினோத்குமார் பிலிப்க்கு சொந்தமான வி.கே.பிஸ் மருத்துவமனை ஐகோர்ட் உத்தரப்படி சீல்வைக்கபட்டது.
10. திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஊராட்சி தலைவர்கள் 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 13 பதவிகள் காலியாக உள்ளன. 13 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion