மேலும் அறிய

Double Decker bus: மீண்டும் டபுள் டக்கர் பஸ்.! எப்போ.. எந்த வழித்தடம்.? இவ்வளவு வசதிகளா.? சென்னை மக்களுக்கு குட் நியூஸ்

Double Decker bus: சென்னையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரட்டை அடுக்கு பேருந்து இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்திற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையை கலக்கிய டபுள் டக்கர் பேருந்து

ஒரு காலத்தில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பேருந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக வரவுள்ளது. ஆமாம்..  1970ஆம் ஆண்டுகளில் டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பேருந்தானது சென்னையில் தாம்பரத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வர தொடங்கினர். பொதுமக்களின் வரவேற்பு அதிகளவில் இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்த காரணத்தால் டபுள் டக்கர் பேருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் மீண்டும் 18ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படவுள்ளது. ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 20 மின்சார இரண்டு அடுக்கு பேருந்துகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இயக்கும் வகையில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் பாலங்கள் சாலையிலும் செல்கிறது. மேலும் புதிய மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

எந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பேருந்து

எனவே இரட்டை அடுக்கு பேருந்து இயக்கும் போது ஏதேனும் பாதிப்பு வருகிறதா என இரட்டை அடுக்கு பேருந்தை சென்னையில் பல்வேறு இடங்களில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றிகரமாக டபுள் டக்கர் பஸ் சோதனை முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இந்த பேருந்தானது சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. தாம்பரம்- பிராட்வே வழித்தடத்திலும், கோயம்பேடு அல்லது அடையாறு முதல் மாமல்லபுரம் வரையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்சார பேருந்துகள் சென்னை மட்டுமல்ல பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் நிலையில், ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 20 மின்சார இரண்டு அடுக்கு பேருந்துகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி இறுதியில் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து

இந்த இரட்டை அடுக்க பேருந்துகள் சுற்றுலா தளங்களை இலக்காக வைத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து துறையின்ர தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம்( ஜனவரி) இறுதியில் சென்னையில் தனது பயணத்தை டபுள் டக்கர் பேருந்து தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்கள் - சிறப்பம்சங்கள்

சென்னையில் மாநகர பேருந்துகளில் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதே போல இரட்டை அடுக்கு பேருந்தும் மின்சாரத்தில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் டீசல் செலவு குறைவதோடு காற்று மாசு மற்றும் கார்பன் வெளியேற்றம் குறைகிறது.

சாதாரண பேருந்தை விட டபுள் டக்கர் பேருந்தில் 50 முதல் 100 % வரை அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். ஒரே நேரத்தில் அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றி செல்வதால் சாலையில் பேருந்துகள் எண்ணிக்கை குறைவதோடு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget