Tata Harrier Safari: ரூ.13 லட்சத்த்துக்கு 7 சீட்டரை இறக்கிய டாடா.. ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - முழு விவரங்கள்
Tata Harrier Safari Petrol Edition: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் பெட்ரோல் எடிஷனை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Tata Harrier Safari Petrol Edition: டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் பெட்ரோல் எடிஷனின் தொடக்க விலை ரூ.12.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - விலை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் பெட்ரோல் எடிஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 5 சீட்டர் டாடா ஹாரியர் பெட்ரோல் எடிஷனின் விலை ரூ.12.89 லட்சத்தில் தொடங்கி ரூ.24.69 லட்சம் வரை நீள்கிறது. சஃபாரி பெட்ரோல் எடிஷனின் விலை 6 சீட்டர் கான்ஃபிகரேஷனில் ரூ.22.83 லட்சத்தில் தொடங்கி ரூ.25.20 லட்சம் வரையிலும், 7 சீட்டர் கான்ஃபிகரேஷனில் ரூ.13.29 லட்சத்தில் தொடங்கி ரூ.25.10 லட்சம் வரையிலும் நீள்கிறது. ப்ராண்டின் ஷோ ரூம்களில் இந்த எடிஷன்களுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - வேரியண்ட்கள்:
ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யுவி கார்கள் இரண்டிலும் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் ஹைபீரியன் டர்போ-GDi இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவின் மிகச்சிறந்த எரிபொருள் செயல்திறன் கொண்ட காராக இருக்கும் என கூறப்படுகிறது. டாடா ஹாரியர் பெட்ரோல் எடிஷன் மொத்தம் 8 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அவை முறையே ஸ்மார்ட், ப்யூர் எக்ஸ், அட்வென்சர் எக்ஸ், அட்வென்சர் எக்ஸ் ப்ளஸ், ஃபியர்லெஸ் எக்ஸ், ஃபியர்லெஸ் எக்ஸ் ப்ளஸ், ஃபியர்லெஸ் அல்ட்ரா, ஃபியர்லெஸ் அல்ட்ரா #டார்க் ஆகும்.
மறுமுனையில் சஃபாரி பெட்ரோல் எடிஷனானது 10 ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவை முறையே ஸ்மார்ட், ப்யூர் எக்ஸ், அட்வென்ச்சர் எக்ஸ் ப்ளஸ், அக்மார்க்ட் எக்ஸ், அக்மார்க்ட் எக்ஸ் ப்ளஸ், அக்மார்க்ட் எக்ஸ் ப்ளஸ் 6எஸ், அக்மார்க்ட் அல்ட்ரா, அக்மார்க்ட் அல்ட்ரா 6எஸ், அக்மார்க்ட் அல்ட்ரா ரெட் #டார்க் மற்றும் அக்மார்க்ட் அல்ட்ரா ரெட் #டார்க் 6எஸ் ஆகும்.
ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - விலை:
| ஹாரியர் வேரியண்ட் | மேனுவல் (ரூ. லட்சம்) | ஆட்டோமேடிக் (ரூ. லட்சம்) | #டார்க் MT (ரூ. லட்சம்) | #டார்க் AT (ரூ. லட்சம்) |
| ஸ்மார்ட் | 12,89,000 | - | - | - |
| ப்யூர் எக்ஸ் | 15,99,000 | 17,53,190 | 16,63,390 | 17,91,090 |
| அட்வென்சர் எக்ஸ் | 16,86,490 | 18,47,290 | 17,38,490 | 18,89,990 |
| அட்வென்சர் எக்ஸ் ப்ளஸ் | 17,13,590 | 18,74,390 | 17,65,590 | 19,26,390 |
| ஃபியர்லெஸ் எக்ஸ் | 19,99,990 | 21,78,890 | 20,65,390 | 22,30,890 |
| ஃபியர்லெஸ் எக்ஸ் ப்ளஸ் | 22,11,990 | 23,53,890 | 22,63,990 | 24,05,890 |
| ஃபியர்லெஸ் அல்ட்ரா | 22,71,990 | 24,13,890 | - | - |
| ஃபியர்லெஸ் அல்ட்ரா #டார்க் | 23,26,990 | 24,68,890 | - | - |
| சஃபாரி வேரியண்ட் | மேனுவல் (ரூ. லட்சம்) | ஆட்டோமேடிக் (ரூ. லட்சம்) | #டார்க் MT (ரூ. லட்சம்) | #டார்க் AT (ரூ. லட்சம்) |
| ஸ்மார்ட் | 13,29,000 | - | - | - |
| ப்யூர் எக்ஸ் | 16,49,190 | 17,91,090 | 17,01,190 | 18,52,590 |
| அட்வென்சர் எக்ஸ் ப்ளஸ் | 17,75,090 | 19,35,990 | 18,27,190 | 19,88,090 |
| அக்கம்ப்ளிஸ்ட் எக்ஸ் | 20,84,290 | 22,49,890 | 21,36,290 | 23,01,890 |
| அக்கம்ப்ளிஸ்ட் எக்ஸ் ப்ளஸ் | 22,73,490 | 24,15,390 | 23,06,590 | 24,48,490 |
| அக்கம்ப்ளிஸ்ட் எக்ஸ்+ 6எஸ் | 22,82,990 | 24,24,890 | 23,16,090 | 24,57,990 |
| அக்கம்ப்ளிஸ்ட் அல்ட்ரா | 23,33,490 | 24,75,390 | - | - |
| அக்கம்ப்ளிஸ்ட் அல்ட்ரா 6எஸ் | 23,42,990 | 24,84,890 | - | - |
| அக்கம்ப்ளிஸ்ட் அல்ட்ரா ரெட் #டார்க் | 23,68,490 | 25,10,390 | - | - |
| அக்கம்ப்ளிஸ்ட் அல்ட்ரா ரெட் #டார்க் 6எஸ் | 23,77,990 | 25,19,890 | - | - |
ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - வடிவமைப்பு
ஹாரியர் மற்றும் சஃபாரியின் பெட்ரோல் எடிஷன்களின் டிசைன் அடிப்படையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. ஹாரியர் பெட்ரோல் கார் புதிய பிரீமியம் நைட்ரோ கிரிம்சன் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கேபின் புதிய டூயல் டோன் ஆய்ஸ்டர் ஒயிட் மற்றும் டைட்டன் பிரவுன் தீமில் முடிக்கப்பட்டுள்ளது. சஃபாரி பெட்ரோல் எடிஷனின் கவனிக்கத்தக்க அம்சங்களாக 19-இன்ச் அலாய் வீல்கள், சிக்னேச்சர் LED DRLகள் மற்றும் கார்னிலியன் ரெட் மற்றும் பிளாக் கேபின் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது
இரண்டு SUVகளும் பாஸ் மோட், வெண்டிலேடட் & பவர்ட் முன் இருக்கைகள், ஆம்பியண்ட் விளக்குகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற டீசல் மாடல்களிலிருந்து பல அம்சங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவை ஹைபரியன் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் அனைத்து வகைகளுக்கும் பாரத் NCAP இலிருந்து மிக உயர்ந்த 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - அம்சங்கள்:
இரண்டு எஸ்யுவிக்களிலும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல ப்ரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சாம்சங் நியோ QLED தொழில்நுட்பம் மூலம் இயங்கும் 14.5 இன்ச் சினிமாடிக் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டால்பி அட்மாஸ், 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், இண்டக்ரேடட் டூயல் டேஷ்கேம் மற்றும் DVR உடன் கூடிய விசியன் XE-IRVM, க்ளியர் வியூ டூயல் கேமரா வாஷர், க்ளைமேட் சின்க் உடன் கூடிய இண்டெலி-ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ரிவர்ஸ் டிப் உடன் கூடிய விசியன் சின்க் மெமரி ORVM-கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - இன்ஜின் விவரங்கள்
ஹாரியர் மற்றும் சஃபாரியின் பெட்ரொல் எடிஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 1.5L ஹைபரியன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் ஆனது 168 bhp மற்றும் 280 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இது சியரா SUV-யில் விட கிட்டத்தட்ட 10 bhp மற்றும் 25 Nm அதிகமாகும். 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் ஸ்டேண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐசின்-சார்ந்த 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. டாடா ஹாரியர் பெட்ரோல் உள்நாட்டு சந்தையில் நேரடியாக MG ஹெக்டருடன் போட்டியிடுகிறது.





















