மேலும் அறிய

தீண்டாமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு திண்பண்டங்களை அனுப்பி வைத்த சமூக அலுவலர்கள்

தென்காசி மாவட்டம் பாஞ்சான் குளம் கிராமத்தில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டங்களை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்த சமூக அலுவலர்களுக்கு பாராட்டு.

சமீபத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று திண்பண்டம் வாங்க முற்படுகின்றனர்.

அப்போது அந்த கடைகாரர், உங்களுக்கு எல்லாம் திண்பண்டம் கொடுக்க முடியாது.  ஊர்க்கூட்டம் போட்டு  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு கடையில் இருந்து எதுவும் தரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது எனக் கூறுகிறார். அதற்கு ஏதும் அறியாத அந்த அப்பாவிச் சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர். அதற்கு அந்த கடைக்காரர் உங்கள் யாருக்கும் திண்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்கள் ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் உங்க தெருகாரர்கள் இங்கு வரக்கூடாது. அதனால் நீங்கள் யாரும் இங்கு பொருள் வாங்க முடியாது என்றும், உங்கள் தாய் தந்தையரிடம் போய் சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலானது.
 
இந்த நிலையில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட  சிறுவர்களுக்கு மதுரையில் உள்ள பல்வேறு சமூகத்தினர் வைத்திருக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று திண்பண்டங்களை வாங்கி சிம்மக்கல் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட அந்த  சிறுவர்களுக்கு திண்பண்டங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
 
மேலும் தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக ஒரு குழு ஒன்றை அமைத்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 
தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget