மேலும் அறிய
Advertisement
பெண்கள் கல்லூரி பேருந்தை மறித்து ட்ரவுசர் உடன் நடனம் - போதை ஆசாமிகளை தேடி வரும் போலீஸ்
’’கல்லூரி பேருந்தை வழி மறித்து நடிகர் வடிவேல் பட பாணியில் பீர்பாட்டிலை நடுரோட்டில் வைத்து ரகளை’’
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் முளைப்பாரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு புரட்டாசி மாதம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குமாரகுறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் மாணவிகள் செல்லும் தனியார் கல்லூரி பேருந்தை வழி மறித்து நடிகர் வடிவேல் பட பாணியில் பீர்பாட்டிலை நடுரோட்டில் வைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பேருந்து முன்பு ஆபாசமாக நடனமாடியும் மேலும் பேருந்து முன்பு நடுரோட்டில், கால் மேல் கால் போட்டு படுத்து கொண்டும், நடனமாடியும் ரகளை செய்தனர். இதனை போதை ஆசாமிகளின் நண்பர்கள் வீடியோ எடுத்து தங்களது செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து தங்களுக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இளையான்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மது போதையில், ரகளையில் ஈடுபட்டஅந்த இளைஞர்களே தேடி வருகின்றனர்.
இதை கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், போதை ஆசாமிகள் சேட்டைகள் தொடர்கிறது. இப்படி அவ்வப்போது வீடியோ ஆதரங்களோடு மாட்டும் இளைஞர்கள் மட்டுமே சிக்குகின்றனர். மற்றவர்கள் தப்பித்து விடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் இளைஞர்கள் சிலர் ஹோட்டலுக்கு கணவருடன் வந்த பெண்ணிடம் வம்புக்கு இழுத்துள்ளனர். இப்படி ஆங்காங்கே ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Chennai Sea Bridge | 7.6 கி.மீ... கடல்மேல் ஒரு பாலம்... சென்னைக்கு விரைவில் வருகிறதா பாம்பன் மாடல்?
சிவகங்கை போலீஸ் எஸ்.பி ஆயுதங்கள் வைத்து வீடியோ போடும் நபர்களை உடனே கைது செய்கிறார். அதைப் போல் இவ்வாறு தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களையும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ’’போதை ஆசாமிகள் மது அருந்திவிட்டு சாலையில் பேருந்துகளை மறித்து ரகளை செய்துள்ளனர். சாலையில் செல்லும் நபர்களையும் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். அவர்களது வீடியோ வைரலாக பரவியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்” என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion