மேலும் அறிய
வைகை ஆற்றில் வரும் உபரி நீர்... உற்சாகமாக மீன் பிடித்து மகிழும் மீன் பிரியர்கள் !
மானாமதுரை வைகை ஆற்றில் அதிசயம், அரிதான 'வெளிச்சி' மீன் கிடைத்தது. அதிக மீன் கிடைத்ததால் மீன் பிரியர்கள் உற்சாகம்.

வைகை
Source : whatsapp
சிவகங்கை மாவட்டத்தில் மழை
தென் மாவட்டங்கங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதே போல் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை நகர் என எல்லா இடங்களில் மழை பெய்து குளங்கள் நிறைந்து வருகிறது.
5 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் அரிய வகை " வெளிச்சி" மீன் கிடைப்பதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகை அணை அதன் கொள்ளவை எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 20ம் தேதி 5 ஆயிரம் கன அடி திறக்கப்பட்ட நிலையில் நேற்று 2 ஆயிரத்து 73 அடியாக குறைந்துவிட்டது.
வலையில் கிடைத்த அரிய வகை மீன்கள்
ஆற்றில் நீர் வரத்து காரணமாக தடுப்பணைகளில் கிராம மக்கள் வலை, தூண்டில் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். வைகை ஆற்றில் கெண்டை, கெழுத்தி, கட்லா, அயிரை போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைக்கும், ஜிலேபி மீன்கள் அரை கிலோவில் இருந்து 2 கிலோ வரை எடையில் கிடைத்து வருகின்றன. கீழப்பசலை தடுப்பணையில் கல்குறிச்சி, ஆலங்குளம், கால் பிரவு கிராம மக்கள் மீன் பிடிக்க குவிந்துள்ளனர். தடுப்பணையில் முதன் முறையாக " வெளிச்சி" என்ற மீன் வகை கிடைத்து வருகிறது.
”வெளிச்சி" மீன் பல ஆண்டுகளாக கிடைப்பதே இல்லை.
ஆலங்குளம் செல்லப்பாண்டி கூறுகையில் " வெளிச்சி" மீன் பல ஆண்டுகளாக கிடைப்பதே இல்லை. முட்கள் அதிகமாக இருந்தாலும் மிகவும் ருசியாக இருக்கும். இந்த மீன் தற்போது கிடைத்து வருகிறது. வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீன் குஞ்சுகள் விடுவது வழக்கம். அவைகள் வளர்ந்து நீர் திறப்பின் போது அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் பிடிக்கப்படுகின்றன” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















