மேலும் அறிய
மதுரையில் அணுகுண்டு பட்டாசு ரீல்ஸ்: இளைஞர்கள் கைது, அதிர்ச்சி தரும் சம்பவங்கள்.. காவல்துறை தீவிர விசாரணை!
மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக போலீஸ் காரை கேலிசெய்தும், அரசு பேருந்தை நிறுத்தி அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்களை தேடும் மாநகர காவல்துறையினர்.

இன்ஸ்டாகிராம் சர்ச்சை
Source : whatsapp
மதுரையில் அணுகுண்டு பட்டாசு மாலையில் பெட்ரோல் ஊற்றி வெடித்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் - 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - இருவர் கைது செய்யப்பட்டனர்.
சர்ச்சை ரீல்ஸ்
தீபாவளியன்று மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அணுகுண்டுபட்டாசுகளை மாலையாக அணிந்து, அதில் பெட்ரோலை ஊற்றி எரிக்கவைத்துள்ளனர். இதனை வீடியோவை சில இளைஞர்கள் தங்களது இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டிருந்தனர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்தபோது கமெண்டுகளில் சிலர் எதிர்ப்பை தெரிவித்து காவல்துறையினர் ரீல்ஸ் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதேபோன்று மதுரை தமுக்கம் சாலை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சில இளைஞர்கள் பைக்ரேஸ் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இளைஞர்கள் கைது
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பெயரில் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட நபர்கள் குறித்த விசாரணை நடைபெற்றது. அதன்படி மதுரை மாநகர் தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் சந்துரு, அரசரடி பகுதியை சேர்ந்த முத்துமணி மற்றும் வீரணண் உள்ளிட்ட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர் இதையடுத்து லோகஷ்சந்துரு, முத்துமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பட்டாசுகளை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தி அதனை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை தமுக்கம் சாலையில் மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக காவல்துறை வாகனத்தை கேலி செய்தும் அரசு பேருந்து முன்பாக நிறுத்தி பயணிகளை அச்சுறுத்திய இளைஞர்களை தல்லாகுளம் காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதே போன்று மதுரை உசிலம்பட்டி பகுதியில் சாலையில் சென்ற வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசிய இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement