மேலும் அறிய
தொடர்மழை: மதுரை கடச்சனேந்தல் கண்மாயில் சிக்கல்.. மீன்பிடி மோகம், நீர்வரத்து பாதிப்பு - அவசர நடவடிக்கை தேவை
யானைமலையை ஒட்டி சாரல் மழை பெய்த நிலையில் சாரல் மழையோடு யானை மலையை பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.

கண்மாய்
Source : whatsapp
தொடர்மழை காரணமாக மதுரை கடச்சனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு - தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் - மீன்பிடிதளமாக மாறிவரும் கடச்சனேந்தல் கண்மாய்.
மதுரையில் தொடர் மழை
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் கண்மாய் கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வரண்டு காணப்பட்டன. இதனிடையே கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக கடச்சனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் முதல் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீரானது வரத்து கால்வாய் மூலமாக கடச்சனேந்தல் கண்மாய்க்கு செல்கிறது. இந்நிலையில் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்கள், தடுப்பு அணைகள் முழுவதும் மரம், செடிகளால் சூழ்ந்து தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்லும் நிலை உள்ளது.
தூள்பறக்கம் மீன்பிடி
தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு அணைகளை மீன்பிடி தளமாக மாற்றி வருகின்றனர். கடச்சனேந்தல் பகுதியில் உள்ள சிறிய தடுப்பணைகளில் முழுவதுமாக மீன்வலையை விரித்து அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான முறையில் கட்லா, ரோக், சிலேபி, உளுவை, பொட்லா, கெண்டைமீன், கெளுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மீன்களை வளர்ப்பதாக கூறி கண்மாயில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்ட நிலையிலும் அதனை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வெளியேற முடியாமல் தவித்து வரும் நிலையில் மீன்களை பிடிப்பதற்காக வலைகளை பயன்படுத்துவது, மீன் பத்தை அமைத்து தண்ணீரை தடுத்து வருவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றது. கடச்சனேந்தல் கண்மாய், மருதங்குளம் கண்மாய் ஆகியவற்றின் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல் மழை காரணமாக மதுரையில் பல இடங்களில் வானவில் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழையால் வந்த வானவில்
ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானைமலை என்பது மதுரையின் அடையாளமாக திகழ்ந்துவருகிறது. இந்நிலையில் யானைமலையை ஒட்டிய பகுதியில் திடீரென மழைக்கான சூழல் உருவான நிலையில் யானைமலையை ஒட்டி பெரிய அளவிலான வானவில் தோன்றியது. சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக வானவில் தோன்றி தென்பட்ட நிலையில் அதனை அப்பகுதி மக்கள் ஏராளமான பார்த்து ரசித்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில், யானைமலையை ஒட்டி சாரல் மழை பெய்த நிலையில் சாரல் மழையோடு யானை மலையை பார்த்து பொதுமக்கள் ரசித்தனர். யானைமலையின் கண்கொள்ளாகாட்சியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
வணிகம்
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement






















