வெடித்து சிதறிய டிவி... பற்றி எரிந்த வீடு - சிவகங்கையில் அடுத்தடுத்து வெடிக்கும் மின்சாதனங்கள்
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர்.
மறவமங்கலத்தில் டி.வி., வெடித்து வீடு தீப்பற்றி எரிந்தது. பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வீடுகளில் தீ பற்றும் சம்பவங்கள்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கிராமத்தில் ராமன் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று வீட்டில் அரசு வழங்கிய இலவச டி.வியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, டி.வி திடீரென தீப்பற்றி வெடித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில் தீ மளமள என பரவி வீடு முழுவதும் பற்றிக்கொண்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர். ஆனால் இத்தீ விபத்தில் தங்க நகை, ரொக்க பணம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்து சாம்பலானதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காளையார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எச்சரிக்கை
”மின் சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தினார் அதனுள் வெப்பம் ஏற்பட்டு வெடித்திருக்கலாம். எனவே பொதுமக்கள் மின் சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் சற்று அதற்கும் ஓய்வு கொடுத்த பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் இது போன்ற சம்பவங்களை நடந்து, உயிரை பறிகொடுக்கும் நிலை கூட ஏற்படலாம். எனவே மின்சாதனங்களிடம், எச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election 2024: "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" - நாளைய தேர்தல் முடிவு குறித்து ராதிகா சரத்குமார்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vadakkan Movie: டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!