மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பாட்டு கேட்கும்போது வெடித்த ‘ப்ளூடூத் ஹெட்செட்’ ...சிதறிய காதுகள் - சிவகங்கையில் அதிர்ச்சி
நேற்று மழை, இடி இடிக்கும் சூழலிலும் வீட்டிற்குள் தெரியாமல் பாட்டுக் கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ப்ளூடூத் ஹெட்செட் வெடித்துள்ளது.
![பாட்டு கேட்கும்போது வெடித்த ‘ப்ளூடூத் ஹெட்செட்’ ...சிதறிய காதுகள் - சிவகங்கையில் அதிர்ச்சி Sivagangai News Bluetooth Headset Suddenly Exploded while listening to Song During Rain Farmer Injured TNN பாட்டு கேட்கும்போது வெடித்த ‘ப்ளூடூத் ஹெட்செட்’ ...சிதறிய காதுகள் - சிவகங்கையில் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/ff8cc2953facb5da3744497b460552071717401898886184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாதிக்கப்பட்டவர்
சிவகங்கையில் தூங்கும் பொழுது ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டதால் காது சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூடூத் ஹெட்செட்
டிஜிட்டல் காலத்தில் ஆன்ட்ராய்டு செல்போன், ப்ளூடூத் கேஜட்ஸ் என்று எல்லாம் டிஜிட்டல் வாழ்க்கையா இருக்கிறது. டிஜிட்டல் சாதனங்களை நாம் முறையாக கையாளும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் அதனை அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சிவகங்கையில் விவசாயி ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டிருந்த போது, திடீரென ஹெட்செட் வெடித்ததால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மதுரையில் சிகிச்சை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மாத்துக்கண்மாய் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் 55. இவர் வீட்டில் படுக்கை அறையில் படுத்து இருக்கும் பொழுது ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். திடீரென்று காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் ஹெட் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக 108 வாகனம் மூலம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூங்கும் பொழுது ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டதால் காது சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தான் காரணம் சகோதரர் தகவல்
இதுகுறித்து பாதிக்கப்பட பன்னீர்செல்வத்தின் சகோதரிடம் பேசினோம், “அண்ணன் எப்போது போல தூங்கும் போது பாட்டு கேட்டுள்ளார். நேற்று மழை, இடி இடிக்கும் சூழலிலும் வீட்டிற்குள் தெரியாமல் பாட்டுக் கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ப்ளூடூத் ஹெட்செட் வெடித்துள்ளது. இதனால் வெடித்திருக்கும் என்று நினைக்கிறோம். தற்போது அண்ணன் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். காளையார்கோவிலில் புகார் அளித்ததை வாபஸ் பெற்றுவிட்டோம்” என்று தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை உசிலம்பட்டி : விசேஷ வீட்டில் பட்டாசு விபத்து: 2 சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயம்..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion