மேலும் அறிய

Lok Sabha Election 2024: "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" - நாளைய தேர்தல் முடிவு குறித்து ராதிகா சரத்குமார்

மீண்டும் பாரத  பிரதமர் மோடி வருவதற்கும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவதற்கும்,  தமிழக & புதுச்சேரியில் சிறந்த வெற்றியை பெற வேண்டியும் இறைவனை  வேண்டியுள்ளோம்.

வாக்கு எண்ணிக்கையும் வழிபாடும்:

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று  அதற்கான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கான கட்சியினர் ,பொதுமக்கள், தொண்டர்கள் என பலரும் ஆர்வமுடன் காத்து உள்ளனர். இதனிடையே முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் என கோயில்களில் தீவிர வழிபாடும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெற்றி பெற வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர்.  

சரத்குமார், ராதிகா சரத்குமார் பேட்டி:

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத்குமார் கூறும் பொழுது,   நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக விருதுநகர் வந்துள்ளோம். நேற்று சிவகங்கையில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்துள்ளோம். மீண்டும் பாரத  பிரதமர் மோடி வருவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவதற்கும்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறந்த முறையில் வெற்றி பெற வேண்டியும் இறைவனை  வேண்டியுள்ளோம். நாளை வாக்கு எண்ணிக்கை பிறகு பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராதிகா சரத்குமார், சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.  நாளை வாக்கு எண்ணிக்கை, மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார். தொடர்ந்து வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு நாளை பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Lok Sabha Election 2024:

சரத்குமார் அங்கப்பிரதட்சணை:

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.  தேமுதிக சார்பில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நாளை  நடைபெறும் வாக்கு எண்ணிக்கையானது தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் எனவும், மனைவி ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. குடும்பத்துடன் சென்று கோயில்களில் வழிபாடு செய்து வருவதோடு நாளைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பில்  இருக்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget