மேலும் அறிய
Advertisement
சிவகங்கை: 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் கண்டனூர் கதர் கிராம தொழில் மையம்
’’மறுசீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று கதர் கிராம தொழில் மையத்தை திறக்க திட்டம்’’
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கண்டனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டிநாடு பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், கண்டனூரில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் நலவாரியம் சார்பில் கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு முன் தொழில் மையம் அமைக்கப்பட்டது. இதற்காக தனக்கு சொந்தமான சுமார் 27 ஏக்கர் நிலத்தை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அரசுக்கு தானமாக கொடுத்தார். கதர் கிராமத் தொழில் மையத்தில் தச்சுத் தொழில், நூற்பு ஆலை, சோப்பு, காலணி தயாரிப்பு, நவீன தறி உள்ளிட்ட தொழில்கள் தொடங்க கட்டிடங்கள் கட்டப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் கதர் கிராம தொழில் மையம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதனை சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் இன்று பார்வையிட்ட போது..
— Karti PC Office (@KartiPCoffice) September 25, 2021
உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. @s_mangudi அவர்கள் pic.twitter.com/dpVPBWh9mU
மேலும் காகிதம் தயாரிக்க இயந்திரங்களும் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் இந்த மையத்தில் தொழில்கள் துவங்கப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் வீணாக கிடந்தது. அதன் பின்னர் அந்த கட்டிடங்கள் மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்துக்கு உட்பட்ட காரைக்குடி சர்வதேச சங்கத்துக்கு வாடகைக்கு விடப்பட்டன. அச்சங்கம் சார்பில் பீரோ, கட்டில், சோப்பு, காலணி, ஹாலோ பிளாக் கல், தச்சு தொழில்கள் போன்றவை நடந்து வந்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்தனர். அதன்பிறகு கண்டனூர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் மையக் கட்டிடங்கள் பயன்பாடின்றி மூடிக் கிடக்கின்றன.
பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களும் வீணாகி கிடந்தது. கடந்த ஆட்சியில் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக சிவகங்கை எம்.எல்.ஏ ஜி.பாஸ்கரன் பொறுப்பேற்றார். இது குறித்து பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தும் பெரிய அளவு மாற்றங்களை அவர் உருவாக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருப்பத்தூர் பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது கண்டனூரை சேர்ந்த பெண் ஒருவர். கண்டனூர் காதி நிறுவனத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரின் மனுவை படித்த பின்னர் கண்டிப்பாக ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கைகள் எடுக்கிறேன் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கதர் கிராம தொழில் வாரிய ஆணையர் சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கதர் கிராம தொழில் மையத்தில் கதர் கிராம தொழில் வாரிய இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ் நேரில்ஆய்வு செய்து எந்த மாதிரியான தொழில் தொடங்கலாம் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடியுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இந்த நிறுவனம் அக்டோபர் 2ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் காரைக்குடி பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion