மேலும் அறிய

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்

BJP President Nitin Nabin: பாஜகவின் புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபியின் அரசியல் பயணம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

BJP President Nitin Nabin: பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நபர் என்ற பெருமையை நிதின் நபி பெற்றுள்ளார்.

பாஜகவின் தலைவராகும் நிதின் நபின்:

பாஜகவின் புதிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார். கட்சியின் பல முக்கிய பொறுப்புகளை இதுவரை இல்லாத வகையில் இளம் வயதிலேயே வகித்த நபின், தனது 45 வயதில் பாஜகவின் இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் தனது 49வது வயதில் பதவியேற்ற அமித் ஷாவே, பாஜகவின் இளம் தலைவர் என்ற பெருமையை பெற்று இருந்தார். கட்சியின் 12வது தலைவரான நபினுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தற்போதைய தலைவரான ஜே.பி. நட்டா என 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ள கட்சியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதோடு, விரைவில் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை நிதின் நபின் வழிநடத்த உள்ளார். 2029ம் ஆண்டு வரை நிதின் இந்த பதவியில் நீடிக்க உள்ளார்.

யார் இந்த நிதின் நபின்?

பீகாரின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், கட்சிக்கு மிகவும் உண்மையானவர், கடுமையாக உழைக்கக் கூடியவர் என்பதை தனது அடையாளமாக கொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டதோடு, பாஜகவின் முத்த தலைவராகவும் இருந்த நவின் கிஷோர் சின்காவின் மறைவிற்கு பிறகு, அவரது மகனான நிதின் நபின் கடந்த 2006ம் ஆண்டு மேற்கு பாட்னா தொகுதி இடைதேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் மூலம், அரசியல் வெளிச்சம் அவர் மீது விழ தொடங்கியது. அரசியல் பயணத்திற்காக தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார். தனது 26வது வயதில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரான நபின், அடுத்த 19 ஆண்டுகளில் பாஜகவின் தலைவராக உருவெடுத்துள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட பங்கிபூரிலிருந்து தொடர்ந்து 5 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்

நிதின் நபினின் குடும்பம், சொத்து விவரங்கள்..

தற்போதைய ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் கடந்த 1980ம் ஆண்டு பிறந்த நிதின் நபின், தீப்மாலா ஸ்ரீவஸ்தா என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, நிதின் நவீனின் மொத்த சொத்துக்கள் ரூ.3.08 கோடி மதிப்புடையவை, இதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் அடங்கும். சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தின்படி, நபின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மொத்தம் ரூ.1.60 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.1.47 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.  வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.56.6 லட்சம் கடன் உள்ளதாம்.

நிதின் நபினின் சமூகம் எப்படி?

நபின், பீகாரில் உயர் சமூகங்களில் ஒன்றாக கருதப்படும் கயஸ்தா பிரிவைச் சேர்ந்தவராவார். அரசியல் ரீதியாக நடுநிலையானதகாவும், நேரடியாக எந்த பிரிவுகளுடன் மோதல் போக்கை கொண்டிருக்காத சமூகமாக திகழ்கிறது. இதன் காரணமாகவே போட்டியின்றி நிதின் நபின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உயர் வகுப்பைச் சேர்ந்தவரை தான் கட்சி தலைமைக்கு கொண்டு வரவேண்டும் என ஆர்எஸ்எஸ் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்

நிதின் நபினின் அரசியல் பயணம்

பீகார் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள நிதின் நபின், கடந்த 2006ம் ஆண்டு இளைஞரணியில் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா இளைஞரணியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தார். 2016 தொடங்கி 2019ம் ஆண்டு வரை பீகார் மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவராக செயல்பட்டுள்ளார்.  நவம்பர் 2023 சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அந்த தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி சத்தீஸ்கரில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களை பாஜக வெல்ல நிதின் நபின் வழிவகை செய்தார். இதன் விளைவாக கடந்த டிசம்பர் மாதம் பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின் தற்போது தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்

அமித் ஷாவின் டம்மியா?

தரைமட்டத்திலிருந்து அயராது உழைத்ததன் மூலம் பாஜகவின் இளம்வயது தலைவராக நபின் உயர்ந்துள்ளார். ஆனால் சுயமாக செயல்படமுடியுமா? அல்லது முக்கிய முடிவுகளை எடுக்க முடியுமா? என்பதே இங்கு கேள்வி. கடந்த 2020ம் ஆண்டு முதல் பாஜகவின் தலைவராக ஜே.பி. நட்டா பதவி வகித்தாலும், கட்சியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் அமித் ஷாவே கவனித்து வருகிறார். இதனால் நட்டாவை போன்றே நபினும் பெயரளவிலேயே தலைவராக இருப்பாரா? அல்லது அதிரடி காட்டுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..! 3 முறை திருமணம், காதலியால் கைவிட்ட மனைவி.. சிக்கிய காதலனின் குடும்பம்
இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..! 3 முறை திருமணம், காதலியால் கைவிட்ட மனைவி.. சிக்கிய காதலனின் குடும்பம்
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..! 3 முறை திருமணம், காதலியால் கைவிட்ட மனைவி.. சிக்கிய காதலனின் குடும்பம்
இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..! 3 முறை திருமணம், காதலியால் கைவிட்ட மனைவி.. சிக்கிய காதலனின் குடும்பம்
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
Embed widget